சாஸ்திரங்களின் படி கடன் பிரச்சனை வருவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. பொதுவாக கடன் பிரச்சனையில் யாரும் விரும்பி போய் மாட்டுவது கிடையாது. சூழ்நிலையின் காரணமாக கடன் பிரச்சனைக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது கடன் வாங்குவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கடன் பிரச்சனைக்குள் போய் சிக்குவதற்கு ஒரு சில காரணங்களும் உள்ளது அதனை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

கடன் வாங்கும் நேரம்
நான் பொதுவாக நகையை அடகு வைத்தாலும் அல்லது பத்திரங்களை அடகு வைத்தாலும் யாரிடம் ஆவது கடன் வாங்கினாலும் அதற்கான நேரம் ஒன்று இருக்கிறது. அவசர தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்கு கடன் வாங்கும் போது தவறான நேரத்தில் கடன் வாங்க கூடாது மேலும் அவசர தேவைக்காக நேரம் பார்க்காமல் வாங்குகின்ற கடனால் அந்த கடன் பிரச்சனைக்குள் சிக்க வேண்டிய சூழலில் ஏற்படும்.
கடன் வாங்க வேண்டிய நேரம்
குளிகை நேரத்தில் நாம் ஒரு காரியத்தை செய்தால் அது நமக்கு மறுபடியும் நடந்து கொண்டே இருக்கும் எனவே குளிகை நேரத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும் பிரச்சினைகளை தரக்கூடிய விஷயங்களை செய்யக்கூடாது எனவே குளிகை நிறுத்தல் ஒருபோதும் அவசர தேவைக்காக பணம் வாங்குவது அல்லது மற்ற தேவைகளுக்காக பணம் கடனாக வாங்குவதோ கூடாது அவ்வாறு செய்யும்போது திரும்பத் திரும்ப கடன் வாங்க நேரிடும். எனவே காலண்டரில் குளிகை நேரம் பார்த்து அதன் பிறகு கடன் வாங்குங்கள்.
கடன் பிரச்சனையில் இருந்து விலக வைக்கும் குளிகை நேரம்
பிரச்சனையில் சிக்கியவர்கள் வாங்கிய கடனை குளிகை நேரம் பார்த்து திருப்பிக் கொடுக்க வேண்டும் அப்படி செய்யும் போது நீங்கள் சீக்கிரத்திலேயே கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தி விடுவீர்கள். முழு கடனையும் அடைத்து கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவீர்கள்.
நகைகளை அடகு வைக்கும் நாள்
பொதுவாக அவசர தேவைக்காக நகைகளை அடமானம் வைக்கும் போது நாள் கிழமை பார்க்காமல் அடகு வைத்து விடுவோம். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது குளிகை நேரத்தில் நகைகளை அடமானம் வைக்க கூடாது மேலும் வெள்ளிக்கிழமையில் நகைகளை அடகு வைக்கவே கூடாது. அவ்வாறு அடகு வைக்கும் போது நகைகளை திருப்புவது மிகவும் கடினமாக மாறிவிடும். மேலும் செவ்வாய்க்கிழமை நகையை அடகு வைப்பதாக இருந்தால் திங்கட்கிழமையே நகைகளை கழட்டி வைக்க வேண்டும் செவ்வாய்க்கிழமை நகைகளை கழட்டக்கூடாது அது குடும்பத்திற்கு நல்லது கிடையாது. அதேபோல் தங்க நகைகளை செவ்வாய்க்கிழமை கழட்டினால் கடன் பிரச்சினைகளும் அதிகமாகும் மேலும் புது நகைகளும் வாங்க முடியாது.
இதனையும் படியுங்கள் : கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!




