அவகேடோ அப்படியே சாப்பிடுவதற்கு பிடிக்கலைன்னா இந்த மாதிரி அவகேடோ புட்டிங் செஞ்சு சாப்பிடுங்க!
பொதுவா பட்டர் ஃப்ரூட் அப்படின்னு சொல்லப்படுற இந்த அவகேடோ நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது காரணம் என்னன்னா இந்த அவகேடோ பழத்துல சுத்தமா இனிப்பே இருக்காது அதனால நிறைய பேரு விரும்பி சாப்பிட மாட்டாங்க ஆனா இந்த பழத்தில் அவ்வளவு சத்துக்கள் இருக்கு. ஆண் பெண் இரண்டு பேருக்குமே இந்த அவகேட
பொதுவா பட்டர் ஃப்ரூட் அப்படின்னு சொல்லப்படுற இந்த அவகேடோ நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது காரணம் என்னன்னா இந்த அவகேடோ பழத்துல சுத்தமா இனிப்பே இருக்காது அதனால நிறைய பேரு விரும்பி சாப்பிட மாட்டாங்க ஆனா இந்த பழத்தில் அவ்வளவு சத்துக்கள் இருக்கு. ஆண் பெண் இரண்டு பேருக்குமே இந்த அவகேடோ பழம் சாப்பிடுவதால் நிறைய நிறைய சத்துக்கள் கிடைக்கும். இந்த அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க இதுல ஜூஸ் போட்டு குடிப்பாங்க ஆனா ஜூஸ் குடிக்கவும் பிடிக்காதவங்க இந்த மாதிரி ஒரு தடவை புட்டிங் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
டேஸ்ட் ரொம்பவே வித்தியாசமா சாப்பிடறதுக்கும் ரொம்ப ருசியா இருக்கும். வீட்ல இருக்க கூடிய குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. என்னதான் இப்போ மழைக்காலமா இருந்தாலும் வெயில் தான் பயங்கரமா அடிக்குது அதனால நல்லா பயங்கரமா வெயில் அடிக்கும்போது இந்த புட்டிங் செஞ்சு பிரிட்ஜுக்குள்ள வச்சு நல்லா ஜில்லுனு எடுத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் சாப்பிடும் போதே தொண்டைக்கு இதமா சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தோணும்.
இப்ப வேற குழந்தைங்க லீவுக்கு வீட்ல இருக்காங்க இந்த மாதிரி டயத்துல அவங்க ஏதாவது சாப்பிடறதுக்கு கேட்டுக்கிட்டே இருப்பாங்க அப்படி கேட்டாங்கன்னா கண்டிப்பா இந்த சூப்பரான டேஸ்ட்டான அவகேடோ புட்டிங் செஞ்சு கொடுங்க. இது உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. குழந்தைகளுக்கு காய்கறிகள் பழங்கள் எல்லாமே சாப்பிடுவதற்கு கொடுத்து பழகணும். அப்படியா அவங்க சாப்பிட மாட்டேன்னு படம் புடிச்சாங்கண்ணா இந்த மாதிரி தான் ஏதாவது டிஃபரென்ட் ஆக செஞ்சு கொடுத்த அவங்கள சாப்பிட வைக்கணும்.
இந்த சூப்பர் டேஸ்டான புட்டிங் ஒரு தடவை சாப்பிட்டு பாத்துட்டீங்கனா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிட தோணும். ஏதாவது விருந்து சாப்பாடு சமைக்கும் போது நல்லா சாப்பிட்டுட்டு டெசர்ட்டுக்கு இந்த புட்டிங் செஞ்சீங்கன்னா அவ்ளோ அருமையா இருக்கும் நல்லா காரசாரமா சாப்டுட்டு ஜில்லுனு இனிப்பா இந்த புட்டிங் சாப்பிடும் போது அவ்ளோ ருசியாக இருக்கும் அதுவும் வெயிலுக்கு அவ்வளவு இதமா இருக்கும் இப்ப வாங்க ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு நிறைவான டேஸ்ட்ல இந்த அவகேடோ புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரொம்பவே ஈஸியான எக் புட்டிங் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!