புட்டிங் அப்படினாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம் மேங்கோ புட்டிங், பால் புட்டிங், ஃப்ரூட்ஸ் புட்டிங் அப்படின்னு எக்கச்சக்கமான புட்டிங் வகைகள் இருக்கு. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான எக் புட்டிங் தான் செய்யப் போறோம். இந்த எக் புட்டிங் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு ஒரே மாதிரியான ஸ்வீட் எப்பவுமே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு எக் புட்டிங் செஞ்சு கொடுங்க.
ஈவினிங் டைம்ல சாப்பிடுறதுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிப்பியும் கூட இல்ல வெயில் காலத்துல மதிய நேரத்தில் கூட இந்த எக் புட்டிங்கை ஜில்லுனு வச்சு சாப்பிடலாம். வெயிலுக்கும் அதுக்கும் நல்லா ஜில்லுனு சாப்பிடுறதுக்கே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான டெஸர்ட் ரெசிபியான இந்த எக் புட்டிங்கை ரொம்ப சிம்பிளா குறைவான பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
எக் புட்டிங் | Egg Pudding Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 அடி கனமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- 1 கப் பால்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/2 கப் சர்க்கரை
- 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
- பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதனையும் சேர்த்து நன்கு கலக்கவும். பால் நன்றாக ஆரிய பிறகு தான் சேர்க்க வேண்டும் சூடாக சேர்க்கக்கூடாது.
- பிறகு சர்க்கரை வெண்ணிலா எசன்ஸ் சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் தடவி அதில் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த சிறிய பாத்திரத்தை வைத்து 45 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான எக் புட்டிங் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வெறும் மூன்று பொருள் வச்சு இந்த வெயிலுக்கு ஏத்த சுவையான இளநீர் புட்டிங் செய்யலாம்!