- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம். இதனை பிரட், சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் கூட பிரெட், ஜாம் வைத்து காலை உணவு சாப்பிடுவர். பிரெட், ஜாம் சுலபமான காலை உணவாகி விடுகிறது. அந்தவகையில் சந்தைகளில் கிடைக்கும் ஜாம்களில் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்கின்றன.
இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எளிதாக வீட்டிலேயே ஏபிசி ஜாம் செய்யலாம். ஆப்பிள், கேரட், பீட்ரூட் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு சிறந்த பழமாகும். இதைப் பயன்படுத்தி எப்படி ஜாம் செய்வது என்பதைத்தான் இப்ப பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த ஜாம் செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை தயாரித்து சுமார் நான்கு வாரங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். தோசை சப்பாத்தி பிரட் போன்றவற்றில் தொட்டு சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும். நீங்கள் கடைகளில் தேவையில்லாத ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஜாமை வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்றால், ஒருமுறை இதை வீட்டிலேயே செய்து முயற்சித்துப் பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : தக்காளி ஜாம் ரெசிபி ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
முதலில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் இவற்றை நன்கு தண்ணீரில் அலசி விட்டு தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு இட்லி பாத்திரத்தில் நறுக்கிய அனைத்தையும் வைத்து அதனுடன் பட்டை வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த கலவையை சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து 20 நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்கவும்.
அதன்பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ஏபிசி ஜாம் தயார்.






