- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- sweets
தக்காளி ஜாம் கண்டிப்பாக நிறைய பேர் வீட்ல செஞ்சி இருக்க மாட்டீங்க ஆனா பிரியாணிக்கு லாஸ்ட்டா டெசர்ட்டுக்கு சாப்பிடறதுக்கு இந்த தக்காளி ஜாம் ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். குழந்தைகளுக்கு பிரட் கூட கடைகளில் விற்கக்கூடிய ஜாம் வாங்கி வச்சு தடவி கொடுக்கிறதுக்கு பதிலா இந்த தக்காளி ஜாம் வீட்டிலேயே செஞ்சு பிரட்ல தடவி கொடுக்கலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாவும் இருக்கும். இந்த தக்காளி ஜாம்ல நம்ம முந்திரி பருப்பு கருப்பு திராட்சை, பேரிச்சம்பழம் எல்லாம் சேர்க்கிறதால டேஸ்ட் அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி ஜாமை அப்படியே வெறும் வாயில கூட சாப்பிடலாம். சுவை ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த தக்காளி ஜாம் ரெசிப்பில பேரிச்சம்பழம் சேர்க்கிறதால ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். சுவையான இந்த தக்காளி ஜாம் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க. இந்த தக்காளி ஜாம் காரைக்குடி திருப்பத்தூர் சைடுல தான் ரொம்ப ரொம்ப பேமஸ். இந்த தக்காளி ஜாம் அதிகமாக பாய் வீட்ல தான் செய்வாங்க. பாய் வீட்டு ஸ்டைலயே ஒரு சூப்பரான தக்காளி ஜாம் தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம். இந்த தக்காளி ஜாம் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்னு தான்.
உங்க வீட்ல தக்காளி நிறைய இருக்கு அப்படின்னா தக்காளி ஊறுகாய் போடுவீங்க அப்படி தக்காளி ஊறுகாய் சாப்பிடுவதற்கு பிடிக்கலைன்னா இந்த தக்காளி ஜாம் செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க. இத பிரிட்ஜில வச்சு ஒரு மாசம் வரைக்கும் யூஸ் பண்ணலாம். கெட்டுப் போகவே போகாது. நெய் அதிகமாக சேர்க்கதால இது ஒரு டேஸ்டும் ரொம்பவே ரிச்சா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சுவையான தக்காளி ஜாம் ரெசிபி ஒரு தடவை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சூப்பரா இருக்கும் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி ஜாம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கலர்ஃபுல்லான ஹெல்தியான பீட்ரூட் ஜாம் செஞ்சு சாப்பிட்டு ஹெல்தியா இருங்க
Ingredients
Method
முதலில் தக்காளியை அரைவேக்காடு வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு கருப்பு திராட்சை பொடி பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கிளறவும்.
அரைத்த தக்காளி விழுது ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு, வெல்லம் அனைத்தும் சேர்த்து கிளறவும்.
தக்காளி நன்றாக வெந்து கெட்டியானதும் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தக்காளி ஜாம் தயார்.






