Home ஸ்வீட்ஸ் கலர்ஃபுல்லான ஹெல்தியான பீட்ரூட் ஜாம் செஞ்சு சாப்பிட்டு ஹெல்தியா இருங்க

கலர்ஃபுல்லான ஹெல்தியான பீட்ரூட் ஜாம் செஞ்சு சாப்பிட்டு ஹெல்தியா இருங்க

சின்ன குழந்தைகளுக்கு எப்பவுமே ஆரோக்கியமான உணவுகள் காய்கறிகள் எது கொடுத்தாலும் பிடிக்காது அவங்களுக்கு ஏத்த மாதிரி இனிப்பு ,சிப்ஸ் இந்த மாதிரி கொடுத்தா தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா நம்ம அந்த மாதிரி அவங்களுக்கு கடைகளில் வாங்கி கொடுத்தா அது கண்டிப்பா உங்களுக்கு ஆரோக்கியமானதாவே இருக்காது.

-விளம்பரம்-

அதனால அவங்களுக்கு நம்ம ஆரோக்கியமா ஏதாவது செஞ்சு கொடுக்கணும் அப்படின்னா காய்கறிகளை வச்சு அவங்களுக்கு புடிச்ச மாதிரியான இனிப்புகள் நம்ம செஞ்சு கொடுக்கலாம். பொதுவா நம்ம பிரட்டுக்கு ஜாம் கடைகள்ல தான் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம் ஆனால் அந்த ஜாம்ல நிறைய சர்க்கரை சேர்க்கறதுனால குழந்தைகளுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்காது.

அதனால அவங்களுக்கு ஆரோக்கியமான வகையில் நம்ம பீட்ரூட் வச்சு ஜாம் செஞ்சு கொடுக்கலாம் சூப்பரா இருக்கும் அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வாங்கக்கூடிய சிவப்பு கலர்லையே இருக்கும். இப்ப வாங்க ஒரு கலர்ஃபுல்லான பீட்ரூட் ஜாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பீட்ரூட் ஜாம் | Beetroot Jam Recipe In Tamil

நம்ம ஆரோக்கியமா ஏதாவது செஞ்சு கொடுக்கணும் அப்படின்னாகாய்கறிகளை வச்சு அவங்களுக்கு புடிச்ச மாதிரியான இனிப்புகள் நம்ம செஞ்சு கொடுக்கலாம்.பொதுவா நம்ம பிரட்டுக்கு ஜாம் கடைகள்ல தான் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம் ஆனால்அந்த ஜாம்ல நிறைய சர்க்கரை சேர்க்கறதுனால குழந்தைகளுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்காது.அதனால அவங்களுக்கு ஆரோக்கியமான வகையில் நம்ம பீட்ரூட்வச்சு ஜாம் செஞ்சு கொடுக்கலாம் சூப்பரா இருக்கும் அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும்இருக்கும் அதே நேரத்தில் வாங்கக்கூடிய சிவப்பு கலர்லையே இருக்கும்
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: deserts, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Beet root Jam
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 அகல பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 100 கிராம் நாட்டுச்சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் தேன்
  • 2 ஏலக்காய்
  • 9 முந்திரி
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை நன்கு சுத்தம் செய்து தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் இந்த பீட்ரூட்டை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட் நன்றாக வெந்த உடன் அதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக காய்ந்தவுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அதில் நெய் சேர்த்து நன்றாககிளறவும்.
  •  
    மறுபடியும் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து முந்திரியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அந்த கலவை ஜாம் பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காயை பொடி செய்து அதில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சூப்பரான பீட்ரூட் ஜாம் தயார்.
  • இந்த பீட்ரூட் ஜாமை நாம் பிரத்தூண்டுகளுக்கு இடையே வைத்து சாப்பிடலாம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fiber: 1.5g | Iron: 2.1mg