எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தயக்கமே இல்லாமல் ஒரு பிடி பிடித்து விடுவீர்கள். அப்படி சிறந்த நன்மை வாய்ந்த நுங்கு மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் அருமையான சுவையான இனிப்பு வகை தான் நுங்கு கீர். கீர் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும்.
கீரில் கேரட் கீர், கோதுமை கீர், ரவை கீர் போன்ற பல வகையான கீர் வகைகள் உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக மருத்துவ குணம் கொண்ட நுங்கை பயன்படுத்தி இனிப்பான கீர் செய்வது பற்றி பார்க்கலாம். இந்த சுவையான நுங்கு கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.
இந்த ரெசிபி கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ரெசிபி ஆகும். எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த நுங்கு கீர் செய்து குடிக்கலாம். இந்த சுவையான நுங்கு கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பாதாம் கீர் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட.
நுங்கு கீர் | Ice Apple Kheer Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 10 நுங்கு
- 3 கப் பால்
- 1/4 கப் கண்டென்ஸ்ட்டு மில்க்
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி
- 1/4 டீஸ்பூன் குங்குமப் பூ
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம்
செய்முறை
- முதலில் நுங்கை தோல் நீக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பால் கொதித்து பாதி அளவு வந்ததும் அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய் தூள் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பின் அரைத்து வைத்துள்ள நுங்கை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின் அதனுடன் பிரஷ் கிரீம் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- பின் அதில் நறுக்கிய பாதாம், முந்திரி, நுங்கு சேர்த்து நன்கு கலந்து இது ஆறிய உடன் பிரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நுங்கு கீர் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!