- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகள், பானங்கள், விதைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் செய்யப்படும் சமையல் பலவற்றில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. காரம் சேர்க்கும் குழம்பு முதல் இனிப்பு பதார்த்தங்கள் வரை தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேங்காயை பயன்படுத்தி செய்யும் தேங்காய் திரட்டி பால் சாப்பிட்டு இருக்கிறீர்களா.
திருநெல்வேலி பக்கம் எந்த விசேஷமாக இருந்தாலும் திரட்டுப் பால் போல தேங்காய் திரட்டுப்பாலும் செய்து சபையில் வைக்க வேண்டும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிது. அத்துடன் ரொம்பவும் ருசியானதும் கூட. திருநெல்வேலி ஸ்பெஷல் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இந்த தேங்காய் திரட்டி பாலை எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த ஸ்வீட்டை வாயில் வைத்தால் அப்படியே கரைந்து விடும்.
இது ஒரு பாரம்பரியமான இனிப்பு வகையாகும். பொதுவாக இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான இனிப்பு வகைகளை சுவைக்க இனிப்பு பிரியர்கள் விரும்புவர். அப்படிப்பட்டவர்கள் தேங்காய் திரட்டிப்பாலை ஒரு முறை சுவைத்தால் அதன் சுவை நிச்சயம் உங்களை அசர வைக்கும். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சுவையான தேங்காய் திரட்டிப்பால் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தேங்காய் சாதம் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், அரிசி மாவு, ஏலக்காய், உப்பு, வெல்லம், அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, தீயை குறைத்து வைத்து கைவிடாமல் நன்கு கலந்து கொண்டே இருக்கவும்.
இந்த கலவை நன்கு திரண்டு வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் திரட்டு பால் தயார்.






