வெரைட்டி சாதங்கள் நிறைய இருக்கு. என்னதான் விதவிதமா குழம்பு செஞ்சாலும் ஒரு சிலருக்கு வெரைட்டி சாதம் தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில புளிசாதம் லெமன் சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் வெஜிடபிள் சாதம் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான தேங்காய் துருவி போட்டு செய்ற தேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு இது ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். அதிகமாக காரம் இல்லாம செய்ற இந்த தேங்காய் சாதத்துக்கு நல்லா காரசாரமா உருளைக்கிழங்கு வறுவல் மாதிரி ஏதாவது செஞ்சா ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியா இருக்கும்.
இந்த ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை உங்க வீட்டுல இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ஒரு சிலர் தேங்காய் அரைச்சு பால் எடுத்து அதிலிருந்து தேங்காய் பால் சாதம் செஞ்சு சாப்பிடுவாங்க ஆனா அந்த மாதிரி செய்வதற்கு டைம் இல்லடா இந்த மாதிரி ஒரு சிம்பிளான தேங்காய் துருவி போட்டு செய்ற தேங்காய் சாதம் செஞ்சு பாருங்க. இந்த தேங்காய் சாதம் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.
குழந்தைகளும் வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. தேங்காய் துருவி வச்சுட்டா சாதமும் இருந்தா பத்து நிமிஷத்துல இது செஞ்சு முடிச்சிடலாம். சாதம் மீதம் ஆயிடுச்சின்னா அதுல எப்பவுமே ஒரே மாதிரியா புளிசாதம் லெமன் சாதம் தயிர்சாதம் செய்யாமல் தேங்காய் துருவி போட்டு இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சிருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இது டேஸ்டான தேங்காய் சாதம் ரெசிபி கண்டிப்பா எல்லாரும் சாப்பிட வேண்டிய ஒரு ரெசிபி காரணம் இது அவ்ளோ ருசியா இருக்கும்.
சில சமயங்களில் நமக்கு சாப்பாடு குழம்பு பொரியல் செய்வதற்கு சோம்பேறித்தனமா இருந்துச்சுன்னா சாதம் மட்டும் வடிச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான வெரைட்டி சாதம் கிளறிடலாம். சூப்பரான இந்த வெரைட்டி சாதம் எல்லாருக்கும் ஃபேவரட் ஆகவே மாறிடும். ஃபேவரட் ஆன இந்த ரெசிபியை அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இந்த ருசியான தேங்காய் சாதத்தை கண்டிப்பா செஞ்சு பாருங்க உருளைக்கிழங்கு வருவல் மாதிரி சைட் டிஷ் செய்வதற்கு நேரம் இல்லைனா கூட அப்பளம் பொரிச்சு அதை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான தேங்காய் சாதம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேங்காய் சாதம் | Coconut Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் வடித்த சாதம்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் சோம்பு
- 3 வர மிளகாய்
- 3 பல் பூண்டு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து காய்ந்த மிளகாய் கடலை பருப்பு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமானதும் உப்பு சேர்த்து வடித்த சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தேங்காய் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!