- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
ரசம் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் ஊறுகாய் உருளைக்கிழங்கு வருவல் சிப்ஸ் இது வச்சு சாப்பிட்டு போர் அடிச்சிருச்சா கவலையே படாதீங்க இந்த சூப்பரான முட்டை மிளகு மசாலா செஞ்சு ரசம் சாதத்துக்கு கூட சாப்பிட்டால் எத்தனை தட்டு சாப்பிடுவீங்க அப்படின்னு கணக்கே இல்லாம சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு ஒரு காரசாரமான ருசியான முட்டை மிளகு மசாலா தான் பார்க்க போறோம். இந்த முட்டை மிளகு மசாலா செய்வதற்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். இத வச்சு நல்லா காரசாரமா ஒரு மசாலா செஞ்சு விடலாம்.
இத ரசம் சாதத்துக்கு மட்டுமில்லாம சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா வெச்சுக்கலாம் இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். மணமாகும் ருசியாவும் சாப்பிடுறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும். உங்க வீட்ல எந்த காய்கறியுமே இல்லை அப்படின்னா அழகா ரசம் சாதம் செஞ்சு முட்டை இருந்துச்சுனா அத வச்சு சூப்பரான இந்த முட்டை மிளகு மசாலா செஞ்சு வேலையை முடிச்சுடுங்க. யாருமே எந்த கேள்வியும் கேட்காம நல்லா சாப்பிட்டுட்டு இருப்பாங்க.
வீட்டுக்கே டக்குனு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கனா அந்த சமயத்துல சிக்கன் மட்டன் எடுக்கிற வாய்ப்பு இல்லைன்னா முட்டை இருந்தா போதும் இந்த சூப்பரான முட்டை மிளகு மசாலா வச்சு சாப்பிடுறதுக்கு கொடுக்கலாம் வீட்டுக்கு வர விருந்தாளிகளும் இது சாப்டுட்டு சூப்பரா இருந்துச்சுன்னு சொல்லிட்டு போவாங்க அந்த அளவுக்கு ருசியாவே பாக்குறதுக்கு தான் ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி மாதிரி தெரியும் ஆனா ருசியில் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். குறையே சொல்லாம ரசம் சாதமா இருந்தாலும் சாப்பிட்டு போயிடுவாங்க.
குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு காலைல இந்த முட்டை மிளகு மசாலா செஞ்சு கொடுத்து விடலாம் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. முட்டைல நிறைய கால்சியம் சத்துக்கள் புரோட்டின் நிறைந்திருக்கிறதால குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு முறைல முட்டையை சாப்பிடுவதற்கு கொடுக்கணும். அந்த வகையில இந்த மாதிரி ஒரு சூப்பரான மசாலா செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிட்டு வருவாங்க இப்ப வாங்க இந்த ருசியான முட்டை மிளகு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு முட்டை பிரியாணி இது போன்று சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக கலந்து இறக்கினால் சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.






