Home ஸ்நாக்ஸ் கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க. குழந்தைகளும் குல்பி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க

-விளம்பரம்-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குல்பி ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில் குல்பி சாப்பிடுவதை பலர் விரும்புவார்கள்.  கோடை நாட்களில் கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை சாப்பிடுவது மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது.

மார்க்கெட்டில் வாங்கும் இந்த கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளிலும் செய்யலாம். கேசர் பிஸ்தா குல்பி செய்முறை மிகவும் எளிதானது. இதை பின்பற்றுவதன் மூலம் கோடையின் சிறந்த நாவிற்கு குளிர்ச்சிதரும் உணவை தயார் செய்யலாம்.

Print
No ratings yet

கேசர் பிஸ்தா குல்பி | Kesar Pistachio Kulfi

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குல்பி ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில் குல்பி சாப்பிடுவதை பலர் விரும்புவார்கள்.  கோடை நாட்களில் கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை சாப்பிடுவது மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. மார்க்கெட்டில் வாங்கும் இந்த கேசர் பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளிலும் செய்யலாம்.
Prep Time6 hours
Active Time15 minutes
Total Time6 hours 15 minutes
Course: Dessert
Cuisine: Indian, TAMIL
Keyword: desserts, kulfi
Yield: 4 people
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குல்பி மோல்டில்

தேவையான பொருட்கள்

  • 600 மி.லி பால் (3 கப்)
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 2 டேபிள்ஸ்பூன் பிஸ்தா பருப்பு
  • 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 3 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் அடிகனமான பாத்திரத்தில் பால் சேர்த்து 10 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்துக் காய்ச்சவும். ஒரு டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவை சேர்க்கவும்.
  • தனியாக வைக்கவும். சோள மாவை 4 மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும். அடுப்பில் காயும் பாலில் சோள மாவு கரைசலை சேர்க்கவும்.
  • அடுப்பை சிறிய தீயில் வைத்துக் கிளறவும். சோள மாவு சேர்ப்பதால் விடாது கிளறவும். பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும்.பால் கெட்டியாகும் போது குங்குமப்பூ கலந்த பால் சேர்க்கவும்.
  • அடுப்பை அணைத்து விட்டு பிஸ்தா, சர்க்கரை பொடி சேர்க்கவும். நன்கு கலக்கவும். நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்பி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 206kcal | Carbohydrates: 20.4g | Protein: 6.9g | Fat: 9g | Cholesterol: 13.3mg | Sodium: 49.7mg | Potassium: 173.9mg | Vitamin A: 246IU | Vitamin C: 1.7mg | Calcium: 295.1mg | Iron: 0.2mg

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா தேங்காய குல்பி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!