ருசியான குடைமிளகாய் உருளைகிழங்கு கிரேவி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் கிரேவி மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி.
இதனையும் படியுங்கள் :ருசியான மகாராஷ்ட்ரா ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க கமகமனு இருக்கும்!
உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி நாம் வழக்கமாக செய்து உண்ணும் கிரேவிகலுக்கு ஒரு அருமையான மாற்று. இவை மற்ற உணவுகளுக்கு சைடிஷ் ஆக உண்பதை விட சப்பாத்தி மற்றும் பூரிக்கு சைடிஷ் ஆக உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை வீட்டில் இருப்பவர்கள் இதை சுவைத்து விட்டால் கட்டாயம் அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து தர சொல்லி கேட்பது நிச்சயம். மேலும் நம் குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.