Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற குடைமிளகாய் சட்னி சட்னி இப்படி செஞ்சி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும்.

இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. குடைமிளகாயை ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு பிரியர்களுக்காக சற்று வித்தியாசமாக குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Advertisement

நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் குடைமிளகாய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இதில் எளிதாக செய்யக்கூடிய மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

குடைமிளகாய் சட்னி | capsicum chutney recipe in tamil

Print Recipe
குடைமிளகாயை ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு பிரியர்களுக்காக சற்று வித்தியாசமாக குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம். நாம் தினமும் சாப்பிடும்
Advertisement
உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் குடைமிளகாய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இதில் எளிதாக செய்யக்கூடிய மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword capsicum chutney
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 40

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 குடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி                      
  • 4 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 4 பல் பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வெந்தவுடன் அதில் குடைமிளகாய் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆற‌விடவும்.
  • இந்த கலவையை நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். அதன்பிறகு இதனை ஒரு பவுளுக்கு மாற்றவும்.
  • ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்.
  • அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 40kcal | Carbohydrates: 0.7g | Protein: 11g | Sodium: 4mg | Potassium: 211mg | Vitamin A: 313IU | Vitamin C: 127mg | Calcium: 7mg | Iron: 0.43mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

6 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

14 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago