இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. குடைமிளகாயை ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு பிரியர்களுக்காக சற்று வித்தியாசமாக குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் குடைமிளகாய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இதில் எளிதாக செய்யக்கூடிய மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
குடைமிளகாய் சட்னி | capsicum chutney recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 குடைமிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 4 காய்ந்த மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
- 4 பல் பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வெந்தவுடன் அதில் குடைமிளகாய் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
- இந்த கலவையை நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். அதன்பிறகு இதனை ஒரு பவுளுக்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்.
- அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.