முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

- Advertisement -

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன துவையல்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு துவையல் ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரு சிலருக்கு துவையல் செஞ்சு அதை சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல் மாங்காய் துவையல் பருப்பு துவையல் அப்படின்னு நிறைய துவையல் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை முள்ளங்கி வச்சு இந்த துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

-விளம்பரம்-

அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி முள்ளங்கி துவையல் செஞ்சி சாப்பிடுவீங்க. முள்ளங்கி வச்சு அல்வா முள்ளங்கி வச்சு முள்ளங்கி சாம்பார் முள்ளங்கி பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா முள்ளங்கி வச்சு சூப்பரான இந்த துவையல் அரைச்சு செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் முள்ளங்கில நிறைய நீர் சத்து இருக்கிறதால வெயிட் லெஸ் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த முள்ளங்கியை அடிக்கடி உங்க உணவில் சேர்த்துக்கோங்க எப்பவும் ஒரே மாதிரியா முள்ளங்கியை சாப்பிட போரடித்ததுன்னா ஒரு தடவை கண்டிப்பா முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -

இந்த துவையல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் இருந்தால் அது நீங்கி சரியாகிடும்.உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த துவையல் செய்வது ரொம்பவே ஈஸி தான் இப்ப வாங்க இந்த சூப்பரான முள்ளங்கி துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

முள்ளங்கி துவையல் | Radish Thuvayal Recipe In Tamil

நீங்க அடிக்கடி முள்ளங்கி துவையல் செஞ்சி சாப்பிடுவீங்க. முள்ளங்கி வச்சு அல்வா முள்ளங்கி வச்சு முள்ளங்கி சாம்பார் முள்ளங்கி பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா முள்ளங்கி வச்சு சூப்பரான இந்த துவையல் அரைச்சு செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் முள்ளங்கில நிறைய நீர் சத்து இருக்கிறதால வெயிட் லெஸ் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த முள்ளங்கியை அடிக்கடி உங்க உணவில் சேர்த்துக்கோங்க எப்பவும் ஒரே மாதிரியா முள்ளங்கியை சாப்பிட போரடித்ததுன்னா ஒரு தடவை கண்டிப்பா முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Radish Thuvayal
Yield: 4
Calories: 19kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ முள்ளங்கி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டேபிள்ஸ்பூன் உளுந்து
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும் பிறகு காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்
  • பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை தக்காளி பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • கழுவி நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்
  • இதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான முள்ளங்கி துவையல் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin A: 7IU | Calcium: 25mg