இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான வெள்ளை பூசணி சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க

- Advertisement -

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும் சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்யலாம்.

-விளம்பரம்-

இந்த பூசணிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது. இது தவிர அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்களும் சாப்பிடலாம். இந்த சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, பூசணிக்காய், கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இவை எளிதாக செய்யக்கூடியது மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் பூசணிக்காய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. அதனால் பூசணிக்காய் வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

வெள்ளை பூசணி சட்னி | White Pumpkin Chutney Recipe In Tamil

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம் பூசணிக்காய் கொண்டு சட்னி செய்யலாம். இந்த பூசணிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: White Pumpkin Chutney
Yield: 4 People
Calories: 94kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 மிக்ஸி
 • 1 தாளிப்பு கரண்டி

தேவையான பொருட்கள்

 • 250 கி வெள்ளை பூசணிக்காய்
 • 1/4 கப் தேங்காய்
 • 4 பச்சை மிளகாய்
 • 1 துண்டு புளி
 • 5 சின்ன வெங்காயம்
 • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • 1/2 டீஸ்பூன் உளுந்து
 • 2 வர ‌மிளகாய்

செய்முறை

 • முதலில் வெள்ளைப் பூசணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
 • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த பூசணிக்காயை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பூசணிக்காயில் தண்ணீர் உள்ளதால் அதே போதுமானது.
 • பின் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், பொட்டுக்கடலை, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த சட்னியை ஒரு பவுளுக்கு மாற்றி விடவும்.
 • பின் ஒரு தாளிப்பு‌ கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
 • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெள்ளை பூசணிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, அடை, ஆப்பம் போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 94kcal | Carbohydrates: 2.1g | Protein: 8.1g | Fat: 1.7g | Sodium: 18mg | Potassium: 340mg | Fiber: 7.2g | Vitamin A: 73IU | Vitamin C: 9mg | Calcium: 21mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!