உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை ரோஸ்ட் செய்து சுவைக்கலாம். கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு.
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை ரோஸ்ட் செய்வது எப்படி என்று காண உள்ளோம்.
இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ரோஸ்ட் ஆனது சாம்பார் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. அந்த வகையில் இந்த கிழங்கு இரத்தம் சுத்திகரிக்க, இதயத்தை பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட்டை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் சர்க்கரை வள்ளி கிழங்கு இருந்தால் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட்டை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு வாய் சாதம் எக்ஸ்ட்ராவாக போகும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் | Sweet Potato Roast Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 சர்க்கரை வள்ளி கிழங்கு
- 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதன் தோலை நீக்கி விட்டு வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் இதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் ஊற வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இந்த பஜ்ஜியின் சுவையே தனி தான்!