- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
கறிவேப்பிலையில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால் கறிவேப்பிலை அரைத்து விட்ட இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து பதமாக செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபி தான் இது. வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக மற்றும் சுவையாக சிக்கனை சமைக்கும் ரெசிபி. இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.
இதனையும் படியுங்கள் : எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
பின் மல்லித் தூள், சீரகத்தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் இதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை மிளகு சிக்கன் தயார்.






