எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு தக்காளி சிக்கன் கறி செஞ்சு சாப்பிடுங்களேன்.

-விளம்பரம்-

சிக்கன் கறி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது. சிக்கனில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம்.

- Advertisement -

சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதுவரை தக்காளியில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இந்த தக்காளி சிக்கன் கறி சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி சிக்கன் கறி இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

Print
5 from 1 vote

தக்காளி சிக்கன் கறி | Tomato Chicken Curry Recipe In Tamil

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு தக்காளி சிக்கன் கறி செஞ்சு சாப்பிடுங்களேன். சிக்கன் கறி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது. இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இந்த தக்காளி சிக்கன் கறி சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Tomato Chicken Curry
Yield: 4 People
Calories: 93kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1/4 கி தக்காளி
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1/4 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் ஃக்ரீம்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் தயிர், கடுகு எண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து சுட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் வெங்காயம், தக்காளி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பட்டர், பிரியாணி இலை, முந்திரி மற்றும் காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • அதன்பிறகு சிக்கனை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் கஸ்தூரி மேத்தி மற்ற ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சிக்கன் கறி தயார்.

Nutrition

Serving: 750g | Calories: 93kcal | Carbohydrates: 5.52g | Protein: 9.4g | Fat: 2.79g | Sodium: 88mg | Potassium: 95mg | Fiber: 6.4g | Vitamin A: 27IU | Vitamin C: 606mg | Calcium: 24mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : சிம்பிள் சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!