- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவாக தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மேகி பிடிக்குமா? அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த முறையில் மேகி செய்து கொடுங்கள். இந்த மேகி ரெசிபியை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளிடம் மேகி, பாஸ்தா, நூடுல்ஸ் அப்படின்னு சொன்னாலே ஒரே குஷி ஆயிடும். அதுக்கு காரணம் குழந்தைகளுக்கு இந்த ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்டு தொல்லை பண்ணுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு அடிக்கடி இதை செய்து கொடுக்காமல் எப்போதாவது ஒரு தடவை செய்து கொடுப்பது தான் நல்லது. ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தான் ரொம்ப ரொம்ப நல்லது ஆனா குழந்தைகள் அடம் பிடித்து கேட்கும் போது எப்பவாவது ஒரு தடவை நிறைய காய்கறிகள் அல்லது முட்டை அல்லது சிக்கன் சேர்த்து சூப்பரான மேகி வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.
அந்த வகையில் இன்று நாம் சிக்கன் மேகி தான் செய்யப் போறோம். இதை குழந்தைகளோட பிரேக்ஃபாஸ்ட் லஞ்ச் டின்னர்னு எல்லாத்துக்குமே செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களுக்குமே மேகினா ரொம்ப பிடிக்கும் அதனால் வீட்டில் இருக்கக்கூடிய எல்லாருமே இந்த சிக்கன் மேகியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான சிக்கன் மேகி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பால் மேகி இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகு தூள், காஷ்மீர் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் மேகியை வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகியதும் கலந்து வைத்துள்ள சிக்கனை நன்கு வதக்கவும்.
பின் பிரெஷ் கிரீம் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு நாம் வேகவைத்த மேகியை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் மேகி தயார்.






