Home ஸ்நாக்ஸ் ருசியான பால் மேகி இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!

ருசியான பால் மேகி இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!

மேகி நூடுல்ஸ் அப்டினாலே குழந்தைகளின் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். ரொம்ப விருப்பப்பட்டு சாப்பிடுற இந்த மேகியோட டேஸ்ட்டுக்கு எல்லாருமே அடிமையா இருப்பாங்க. இப்போ மேகில பன்னீர், சிக்கன், முட்டை, வெஜிடபிள்ஸ்னு பல வெரைட்டிகளை சேர்த்து செஞ்சிட்டு இருக்காங்க . அந்த வகையில இன்னைக்கு நம்ம சூப்பரான ஒரு டிஷ் பண்ண போறோம். அதுதான் பால் மேகி. என்னடா மேகையில் பால் ஊத்தி செஞ்சா நல்லா இருக்குமா அப்படி யோசிக்கிறீர்களா.ரொம்பவே நல்லா இருக்குங்க இந்த பால் மேகி நீங்க ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த பால் மேக்கில இருக்கிற டேஸ்ட் உங்க எல்லாருக்குமே ரொம்பவே புடிச்சு போயிடும். இந்த பால் மேகி அப்படிங்கறது நம்ம எப்போதும் பண்ற மேகில கொஞ்சம் டிஃபரண்டா பாலை சேர்த்து பண்ண போறோம். அதுவும் ரொம்பவே சுவையாவும் சூப்பராவும் இருக்கும் இது குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பால் மேக்கையை எப்படி சூப்பரா செய்யலாம்னு தெரிஞ்சுக்க இருக்கோம் இந்த பால் மேகி ரொம்பவே டேஸ்டா இருக்கிறது மட்டும் இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கிறதுனால எல்லாருக்கும் பிடிக்கும்.

எப்போதும் மேகிய நம்ம ஒரே மாதிரி சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது இல்ல கொஞ்சம் ஒயிட் கலர் மாதிரி சாப்பிட்டா எப்படி இருக்கும் அதுக்கு தான் இந்த பால் மேகி. இந்த வித்தியாசமா மேகில பாலை சேர்த்து செய்யும் போது எப்படி இருக்கும். நல்லா இருக்காது அப்படின்னு யோசிக்கிறவங்களா இருந்தீங்கன்னா ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம் இந்த பால் மேகி உண்மையிலேயே சூப்பர் டேஸ்ட்டா தான் இருக்கும். வீட்ல ட்ரை பண்ணி பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான பால் மேகி ரொம்ப ரொம்ப சிம்பிள் எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
1 from 1 vote

பால் மேகி | Milk maggie recipe in tamil

இந்த பால் மேக்கில இருக்கிற டேஸ்ட் உங்க எல்லாருக்குமே ரொம்பவே புடிச்சு போயிடும். இந்த பால் மேகி அப்படிங்கறது நம்ம எப்போதும் பண்ற மேகில கொஞ்சம் டிஃபரண்டா பாலை சேர்த்து பண்ண போறோம். அதுவும் ரொம்பவே சுவையாவும் சூப்பராவும் இருக்கும் இது குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பால் மேக்கையை எப்படி சூப்பரா செய்யலாம்னு தெரிஞ்சுக்க இருக்கோம் இந்த பால் மேகி ரொம்பவே டேஸ்டா இருக்கிறது மட்டும் இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கிறதுனால எல்லாருக்கும் பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Baby Corn Veg Noodles, Chappathi Noodles, Maggi Potato Balls, Mumbai Maggi Idly
Yield: 4 People
Calories: 150kcal
Cost: 50

Equipment

  • 1 கரண்டி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் காய்ச்சிய பால்
  • கொத்தமல்லி சிறிதளவ
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பச்சை மிளகாய் கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி விட்டு இப்பொழுது மேகி மசாலா காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பை மட்டும் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேகியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • மேகி முக்கால் பதம் வெந்து வந்த பிறகு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • நன்றாக மேகி வெந்து பால் கொதித்து வந்த பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான பால் மேகி தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 12g | Protein: 9g | Fat: 15g