- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 5
- Cuisine
- tamil nadu
- Course
- snacks
வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம் பெரும்பாலும் எல்லாமே வீட்லையே ஆரம்பிச்சிட்டோம். அதுக்கு காரணம் கடைகள்ல இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்கிறது இல்ல அதனால வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செஞ்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.
அந்த வகையில் எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சமோசா இல்ல சிக்கன் சமோசா தான் இப்ப நம்ம செய்ய போறோம். இந்த சிக்கன் சமோசா செய்வது ரொம்பவே ஈஸி தான். நம்ம நினைக்கிற மாதிரி ரொம்ப கஷ்டம் கிடையாது. ரொம்பவே ஈஸியா அதே நேரத்தில் ரொம்ப டேஸ்ட்டா இந்த சிக்கன் சமோசாவை செஞ்சிடலாம். சாப்பிடுறதுக்கும் கடைகளில் கிடைக்கிற அதே மாதிரியான டேஸ்ட்டுல இருக்கும். பொதுவாவே சிக்கன் நான் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அந்த சிக்கன் வச்சு இப்ப நம்ம செய்ய போற இந்த சிக்கன் சமோசா குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும்.
நீங்களும் உங்க வீட்ல உங்க குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கிற பெரிய உங்களுக்கு வீட்டுக்கு வர முக்கியமான விருந்தாளிகளுக்குன்னு ஈவினிங் டைம்ல இந்த சமோசா செஞ்சு கூடவே ஒரு கப் காபி இல்லனா டீ கொடுத்தா ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சிக்கன் சமோசாவை வீட்டில் எப்படி ஆரோக்கியமா செய்வது என பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
மைதாமாவுடன் சிறிதளவு உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் கரம் மசாலா கொத்தமல்லி இலைகள் வேக வைத்த பட்டாணி வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மைதாமாவை சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து அதனை சப்பாத்தி கல்லில் போட்டு பாதியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
பிறகு அதனை அரைவட்டமாக நறுக்கி அதில் தயார் செய்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து சமோசா வடிவத்திற்கு மடக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா தயார்.






