Home சைவம் சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான ரெசிபி வந்து தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக செய்துவிட்டு வராங்க. இது எங்க பாட்டி வந்து ரொம்ப நல்லா செய்வாங்க. இந்த சுவையான வெண்ண புட்டு அரிசி மாவுல வெல்லம், தேங்காய் எல்லாம் கலந்து ரொம்ப சுவையா செய்வாங்க . ஆனால் இது காய்ச்சறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் அது நல்லா கெட்டியாகுற வரைக்கும் நம்ம நல்லா காய்ச்சி எடுத்து அதுக்கப்புறம் அது ஆற வச்சு அப்பதான் கேக் மாதிரி கட் பண்ணி சாப்பிட முடியும்.

-விளம்பரம்-

ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் அப்படியே வாயில வச்ச உடனேயே கரைந்து போய்விடும் அந்த அளவுக்கு ரொம்பவே டேஸ்டாவும் சாப்டாவும் இருக்கும். இந்த வெண்ணை புட்டு செய்தீங்கன்னா அவ்வளவுதான் குழந்தைங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இது ஒரு 60 70 காலங்களில் வரப்பட்ட உணவு வகை அப்படின்னு சொல்லலாம். எங்க அம்மா பள்ளிக்கு செல்லும் பொழுது இந்த உணவை தான் வாங்கி சாப்பிடுவாங்க. .

ரொம்பவே நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க . பாட்டி சொல்லிக் கொடுத்தது இது எப்படி ரொம்ப நல்லா இருக்கும் இந்த மாதிரி இது அரிசி மாவு, வெல்லம் அதுல எல்லாம் சேர்த்து செய்யறதுனால ரொம்பவே சத்தான ஒரு உணவா இருக்கு. இந்த உணவு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவது மட்டும் இல்லாம உங்களுக்கு ஒரு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த சுவையான வெண்ணெய் புட்டு எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Print
No ratings yet

வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான ரெசிபி வந்து தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக செய்துவிட்டு வராங்க. இது எங்க பாட்டி வந்து ரொம்ப நல்லா செய்வாங்க. இந்த சுவையான வெண்ண புட்டு அரிசி மாவுல வெல்லம், தேங்காய் எல்லாம் கலந்து ரொம்ப சுவையா செய்வாங்க . ஆனால் இது காய்ச்சறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் அது நல்லா கெட்டியாகுற வரைக்கும் நம்ம நல்லா காய்ச்சி எடுத்து அதுக்கப்புறம் அது ஆற வச்சு அப்பதான் கேக் மாதிரி கட் பண்ணி சாப்பிட முடியும். ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் அப்படியே வாயில வச்ச உடனேயே கரைந்து போய்விடும் அந்த அளவுக்கு ரொம்பவே டேஸ்டாவும் சாப்டாவும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time30 minutes
Total Time45 minutes
Course: deserts
Cuisine: tamilnadu
Keyword: aval puttu, Pearl Miller Puttu, rava puttu, Raw Banana Puttu
Yield: 10 people
Calories: 150kcal
Cost: 75

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 2 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 3 ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்றாக மைய அரைத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீரோடு வெல்லத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் அரிசி மாவிற்கு 1 12 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு தண்ணீர் சூடாகி கொதி வந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டி வைத்து கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
  • மாவை சேர்க்கும் போது கலந்து விட வேண்டும் இல்லை என்றால் கட்டி ஆகிவிடும் இதுபோல் மாவை நன்றாக கொதித்து கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • மாவு முக்கால் பதம் வெந்து கட்டியானதும் அதில் காய்ச்சி வடிகட்டிய வெள்ளத்தை செய்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • அரிசி வெல்லம் சேர்ந்து நன்றாக கட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் மட்டும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் தயாராக வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து ஆறவைத்து பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட கொடுத்தால் சுவையான வெண்ணெய் புட்டு தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 25g | Protein: 12g | Fat: 13g