Home காலை உணவு இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள்...

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலக் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

-விளம்பரம்-

தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாலக் கீரை உள்ளது என்றால், இதுவரை இந்த கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள்‌ என்றால் அப்படியானால் அடுத்தமுறை பாலக் கீரையை கொண்டு அடை தோசை செய்யுங்கள். பாலக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம்.

ஆனால் இது போல அடை தோசை செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை இப்படி தோசை செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கீரையின் அடர் பச்சை நிறத்தில், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கு குறைவில்லாத இந்த அற்புதமான தோசை ரெசிபியை நிச்சயம் செய்து பாருங்கள்.

Print
5 from 1 vote

பாலக் கீரை அடை தோசை | Palak Adai Dosa Recipe In Tamil

தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாலக் கீரை உள்ளது என்றால், இதுவரை இந்த கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள்‌ என்றால் அப்படியானால் அடுத்தமுறை பாலக் கீரையை கொண்டு அடை தோசை செய்யுங்கள். பாலக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல அடை தோசை செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Palak Adai Dosa
Yield: 4 People
Calories: 190kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் பச்சரிசி
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் கடலை பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துருவிய கேரட்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கட்டு பாலக் கீரை
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் அரிசி மற்றும் பருப்பை கிரைண்டரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், சேர்த்து அரைத்து அதனுடன் பாலக் கீரை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் சேர்த்து லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு உப்பு, வதக்கிய வெங்காயம், அரைத்து கீரை விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை சேர்த்து தோசையாக வார்த்து எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.‌
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை அடை தோசை தயார். இதனுடன் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 190kcal | Carbohydrates: 3.14g | Protein: 26g | Fat: 3.9g | Sodium: 40mg | Potassium: 158mg | Fiber: 7.2g | Vitamin A: 55IU | Vitamin C: 189mg | Calcium: 77mg | Iron: 6.7mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான எக் கீமா தோசை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!