- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- snacks
மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும். அந்த வகையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும். கடைகளில் இருந்து பஜ்ஜி வடை போண்டா எல்லாமே வாங்கிட்டு வந்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் பப்ஸ் ரோல் அந்த மாதிரி வாங்கி சாப்பிட வாங்க. அந்த கடையில வாங்கக்கூடிய சில உணவுகள் நேமே கூட ஒருத்தருக்கு பஜ்ஜி பிடிக்கும் ஒருத்தருக்கு போண்டா பிடிக்கும் ஒருத்தருக்கு வடை பிடிக்கும்
ஆனால் கண்டிப்பா எல்லாருக்குமே வெங்காயம் வடை ரொம்ப பிடிக்கும் அந்த வெங்காய வடையை கடையில் போய் வாங்கி சாப்பிடாம நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சூப்பர் டேஸ்ட்ல செஞ்சு சாப்பிடலாம். ரெண்டு வெங்காயம் இருந்தா போதும் நம்மளோட ஈவினிங் டைமே ஒரு காபி இந்த வெங்காய வடையோட சூப்பரா முடியும். கண்டிப்பா நீங்களும் இந்த வெங்காய வடைய இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும்.
கடையில போய் காசு கொடுத்து வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த வெங்காய வடையை செஞ்சிடலாம் எப்படியும் நம்ம வீட்ல எப்பவுமே வெங்காயம் கடலை மாவு எல்லாமே இருக்கும் அதனால வீட்டிலேயே இந்த வெங்காய வடைய சுலபமான முறையில் ஆரோக்கியமான முறையில செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான வெங்காய வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் கடலை மாவு,அரிசி மாவு ,மிளகாய் தூள் சோம்பு, கருவேப்பிலை பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் வடையாக போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான வெங்காய வடை தயார்






