தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். இந்த முறை வெண்பொங்கலை பச்சரிசியில் செய்யாமல் கொஞ்சம் மாற்றாக கோதுமை ரவையில் செய்யலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் ரவையில் அதிகம் உள்ளன. இன்று கோதுமை ரவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உங்கள் காலை உணவை மிகவும் சுவையான உணவாக மாற்ற இந்த ரவா பொங்கலை ஒரு முறை செய்து பாருங்கள். இப்படி ஒரு தடவை நீங்கள் ரவா பொங்கல் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த ரவா பொங்கல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
கோதுமை ரவை வெண்பொங்கல் | Wheat Rava Pongal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 200 கி கோதுமை ரவை
- 100 கி பாசிப்பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- 8 முந்திரி
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பாசிபருப்பை நன்கு சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட விடவும். அதன்பிறகு ரவையை சேர்த்து மெதுவாக கைவிடாமல் கலந்து விடவும். பின் ரவை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின் இதனை ரவை பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.
- அதன்பின் அதே கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து பொங்கலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கோதுமை ரவா பொங்கல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான வெண்பொங்கல் இனி இப்படி செஞ்சி பாருங்க, டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!