ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

- Advertisement -

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும் காலை, மாலை உணவு  வித்தியாசமாக இருந்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் இட்லி மாவை அரைத்து வைத்து கொண்டு அதனை வாரம் முழுவதும் தோசை அல்லது இட்லி செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.

-விளம்பரம்-

ஆனால் இந்த இட்லி, தோசை தொடர்ந்து சாப்பிடுவதற்கு சற்றுச் சலிப்பாக தோன்றும். எனவே கொஞ்சம் வித்தியாசமான சுவையை ருசிக்க ஆசை கேழ்வரகு முருங்கைக்கீரை அடை செய்து பாருங்கள். கேழ்வரகு முருங்கைக்கீரை அடை.

- Advertisement -

இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக,மிகவும் சுவையாகவும் இருக்கும்.இந்த கேழ்வரகு முருங்கைக்கீரை அடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
5 from 1 vote

கேழ்வரகு முருங்கைக்கீரை அடை| Ragi Moringa leaves Adai Recipe In Tamil

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும் காலை, மாலை உணவு  வித்தியாசமாக இருந்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் இட்லி மாவை அரைத்து வைத்து கொண்டு அதனை வாரம் முழுவதும் தோசை அல்லது இட்லி செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த இட்லி, தோசை தொடர்ந்து சாப்பிடுவதற்கு சற்றுச் சலிப்பாக தோன்றும். எனவே கொஞ்சம் வித்தியாசமான சுவையை ருசிக்க ஆசை கேழ்வரகு முருங்கைக்கீரை அடை செய்து பாருங்கள். கேழ்வரகு முருங்கைக்கீரை அடை இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக,மிகவும் சுவையாகவும் இருக்கும்.இந்த கேழ்வரகு முருங்கைக்கீரை அடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamilnadu
Keyword: Ragi Moringa leaves Adai
Yield: 4
Calories: 160kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

 • 1 கப் கேழ்வரகு மாவு
 • 1/2 கப் ஆய்ந்த முருங்கைக்கீரை ஃப்ரெஷ்
 • 1 வெங்காயம்
 • 1 பச்சை மிளகாய்
 • எண்ணெய் தேவையானஅளவு
 • உப்பு தேவையானஅளவு.

செய்முறை

 • வெங்காயம்,பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும்.
 • அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும்.
 • பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதனையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!