பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி குட்டி குட்டி இட்லி ஊத்தி பொடி இட்லி நெய் ஊத்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே சுவையா இருக்கும். இந்த குண்டூர் ஸ்டைல்ல காரப்பொடி எப்படி செய்வது தெரிஞ்சிக்கிட்டா போதும் இந்த பொடியை நீங்க இட்லி மிளகாய் பொடி, பொடி தோசை, காய்கறிகள் வறுவல் இந்த மாதிரி எல்லாத்துக்குமே நீங்க பயன்படுத்திக்கலாம்.
நல்ல காரசாரமான சுவைல இந்த பொடி செய்து சாப்பிடும்பொழுது எப்போதும் சாப்பிட விட அதிகமாகவே ருசித்து சாப்பிடுவோம். இந்த பொடியை சேர்த்துக்கொள்வது சாப்பாட்டோட சுவை இன்னுமே அதிகமாகும். அப்படி இந்த பொடிய நம்ம செய்து சாப்பாட்டில் சேர்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இது குண்டூர் ஸ்டைல் கார பொடி. இந்த குண்டூர் கார பொடி எப்படி ரொம்ப ஈஸியா செய்யலாம் .
இந்த குண்டூர் கார பொடி எல்லாம் சாப்பாட்டுலையுமே நம்ம சேர்த்துக் கொள்வது ரொம்பவே சுவையா இருக்கும். அதுவும் சைட் டிஷ்களான வறுவல்களுக்கு இதுல லேசா ஒரு ஸ்பூன் சேர்த்து சமைக்கும் போது ரொம்ப சுவையா வரும். இந்த அளவுக்கு சுவையான காரப்பொடி வைத்து சூப்பரான குண்டூர் குட்டி கார இட்லி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்
குண்டூர் கார இட்லி | Kundur Kaara Idly Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் இட்லி மாவு
- 1 கப் துவரம் பருப்பு
- 1 கப் உளுந்து
- 1 கப் கடலைப் பருப்பு
- 2 ஸ்பூன் தனியா விதைகள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 12 பல் பூண்டு
- 20 குண்டு காய்ந்தமிளகாய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தனியா விதைகள், சீரகம், வெந்தயம் சேர்த்து அவைகளையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் பூண்டு பற்களை தோளோடு அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும்.விருப்பமிருந்தால் இடித்தும் சேர்த்துக் கொள்ளலாம் பூண்டையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் குண்டு காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்து எடுத்து அனைத்து பொருட்களையும் ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.
- வறுத்து வைத்துள்ள பொருட்கள் ஆறுவதற்குள் குட்டி இட்லி தட்டில் இட்லியை ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும் இட்லி வெந்து வருவதற்குள் இந்த ஆற வைத்த பொருட்களைஎல்லாம் சேர்த்து பொடி தயார் செய்து கொள்ளலாம்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் மட்டும் முதலில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பொடியை தயார் செய்து வைத்த பிறகு வேக வைத்துள்ள இட்லியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவேண்டும்.
- பிறகு அதில் குட்டி இட்லியை சேர்த்து கிளறிவிட்டு அதன் மேல் இந்த பொடித்து வைத்துள்ள குண்டூர் காரப்பொடி சேர்த்து கலந்துவிட்டு சூடாக பரிமாறினால் சுவையான குண்டூர் குட்டி கார இட்லி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : உடனடியா இட்லி சாம்பார் பத்து நிமிடத்தில் பக்காவான சுவையில் இப்படி கூட செய்யலாம்!