Home சைவம் உடனடியா இட்லி சாம்பார் பத்து நிமிடத்தில்  பக்காவான சுவையில் இப்படி கூட செய்யலாம்!

உடனடியா இட்லி சாம்பார் பத்து நிமிடத்தில்  பக்காவான சுவையில் இப்படி கூட செய்யலாம்!

காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும் ஹஸ்பண்ட ஆபீஸ் அனுப்பனும் இந்த டென்ஷன்ல இட்லிக்கு சாம்பார் வைக்கணும்னு நினைச்சாலே தலையே சுத்திடும். ஏன்னா இட்லிக்கு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேலயாவது ஆகும் . அதுவும் பருப்பு வெந்து காய் வெந்து ஒரே டென்ஷனா இருக்கும். இதெல்லாம் லஞ்ச் வேற தயார் பண்ணனும் இவ்ளோ டென்ஷனா இருக்கும்போது எப்படி சுலபமா பத்தே நிமிஷத்துல இட்லிக்கு சாம்பார் வைக்க போறது அப்படின்னு பார்க்கலாம்.

-விளம்பரம்-

இட்லிக்கு ஏத்தனை சட்னிகள், பொடி இதெல்லாம் வைத்து சாப்பிட்டா கூட இட்லி சாம்பார் கூட சாப்பிட்ற சுவையே தனிதான். அந்த இட்லிக்கும் சாம்பார்க்கும் இருக்கு ஒரு கனெக்ஷனை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஏன் அப்படினா இட்லியும் சாம்பார் அப்படி ஒரு காம்பினேஷன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த மாதிரி சுவையா சாப்பிடணும்னு ஆசைப்படறோம் ஆனால் அதை காலையிலேயே செய்து  குழந்தைகளுக்கும் கணவருக்கு கொடுக்கணும் அப்படிங்கும் போது ரொம்ப டைம் எடுக்கும். மதிய உணவு  சேர்ந்து செய்யணும் அப்படின்னா கஷ்டம் தான்.

அதுக்காகத்தான் இந்த இன்ஸ்டன்ட் சாம்பார். ரொம்ப ரொம்ப ஈஸியா ஒரு பத்து நிமிஷத்துல எப்படி செய்யறது அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். பத்து நிமிஷத்துல செய்தா சாம்பார் எப்படி டேஸ்டா இருக்கும் அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் அப்படின்னா பத்து நிமிஷத்துல செஞ்சாலும் சாம்பாரோட டேஸ்ட் ரொம்பவே பக்காவா இருக்கும்.

எப்போதும் நான்கு இட்லி சாப்பிடுறீங்களா ?  அப்போ எக்ஸ்ட்ராவா மூன்று  இட்லி சேர்த்து ஏழு இட்லி நீங்க சாப்பிடுவீங்க. அந்த மாதிரி சுவையில் இருக்கும் இந்த அதிரடி சாம்பார். சரி வாங்க அதிரடி சாம்பார் உடனடியாக வைக்கிறதுக்கு பக்காவான டேஸ்ட்ல செய்யறது எப்படினு தெரிஞ்சுக்கலாம்.

Print
3.40 from 5 votes

இட்லி சாம்பார் | Idly Sambar Recipe In Tamil

காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும் ஹஸ்பண்ட ஆபீஸ் அனுப்பனும் இந்த டென்ஷன்ல இட்லிக்கு சாம்பார் வைக்கணும்னு நினைச்சாலே தலையே சுத்திடும். ஏன்னா இட்லிக்கு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேலயாவது ஆகும் . அதுவும் பருப்பு வெந்து காய் வெந்து ஒரே டென்ஷனா இருக்கும். இதெல்லாம் லஞ்ச் வேற தயார் பண்ணனும் இவ்ளோ டென்ஷனா இருக்கும்போது எப்படி சுலபமா பத்தே நிமிஷத்துல இட்லிக்கு சாம்பார் வைக்க போறது அப்படின்னு பார்க்கலாம். வாங்க அதிரடி சாம்பார் உடனடியாக வைக்கிறதுக்கு பக்காவான டேஸ்ட்ல செய்யறது எப்படினு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: idly sambar
Yield: 4
Calories: 38kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 12 கப்  பாசிப்பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு தேவையானஅளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 14 ஸ்பூன் வெந்தயம்
  • 14 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை கழுவி விட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும். இந்த பாசி பருப்பு ஊறுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்போது அனைவரும் வீட்டிலும் குக்கர்கள் உபயோகபடுத்துகிறார்கள். அதனால் மிகவும் சுலபமாக இந்த சாம்பாரை வைத்து விடலாம்.
  • அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  •  பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு, கேரட் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அதில் மிளகாய்தூள் சேர்த்து கிளறி பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஊற்றி சாம்பாருக்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
  • சாம்பார் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு குக்கரில் இரண்டு விசில்கள் வரும் வரை வைத்து மூடவும்.
     
  • குக்கரில் விசில் வந்து முடிந்த பிறகு குக்கரை திறந்த கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கினால் சூடான இட்லி சாம்பார் தயார்.
  • இந்த அதிரடி உடனடி இட்லி சாம்பார் இட்லி மற்றும் தோசைக்கும் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Fiber: 1.7g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg | Iron: 10mg