Home சைவம் வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய ரெசிபி நிறைய இருந்தாலும் இப்போ ரிசண்ட்டா எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு தா இந்த ஷாகி துக்டா‌.இந்த ஷாகி துக்டா  கடைகளில் கிடைக்கிற மாதிரி வீட்ல செய்ய முடியுமா அப்படின்னு எல்லாருக்கும் டவுட்டா இருக்கும். ஆனா கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்ல சூப்பரா நம்மளால செய்ய முடியும். பிரட் வச்சு நம்ம நிறைய ஸ்னாக்ஸ் ரெசிப்பி செஞ்சிருப்போம்.

-விளம்பரம்-

பிரட் ஹல்வா பிரட் வச்சு செய்யக்கூடிய பிரட் ரோல் பிரட் உப்புமா அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சி இருந்தாலும் இந்த ஷாகி துக்டா ரொம்பவே ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பாலும் பிரட் துண்டுகளும் இருந்தா போதும் சுவையான இந்த ரெசிபி நம்ம செய்யலாம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இது.

வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த சூப்பரான ரெசிபி கண்டிப்பா எல்லாரும் வீட்லயும் செய்யணும்.பிரியாணி மட்டன் சிக்கன் அப்டின்னு நல்லா காரசாரமா சாப்பிடும்போது இனிப்பா இந்த சுவையான ஷாகி துக்டா சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். கடைக்கு போய் தான் இந்த ரெசிபியை சாப்பிடணும் அப்படின்னு அவசியம் கிடையாது வீட்டில் ரொம்ப சூப்பரா நம்ம சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான இனிப்பான அட்டகாசமான ஷாகி துக்டா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.34 from 3 votes

ஷாகி துக்டா | Shagi Thuda Recipe In Tamil

பிரட் ஹல்வா பிரட் வச்சு செய்யக்கூடிய பிரட் ரோல் பிரட் உப்புமா அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிஇருந்தாலும் இந்த ஷாகி துக்டா ரொம்பவே ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம்.பாலும் பிரட் துண்டுகளும் இருந்தா போதும் சுவையான இந்த ரெசிபி நம்ம செய்யலாம். குழந்தைகள்லஇருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இது. கடைக்கு போய் தான் இந்த ரெசிபியை சாப்பிடணும் அப்படின்னுஅவசியம் கிடையாது வீட்டில் ரொம்ப சூப்பரா நம்ம சாப்பிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Shahi Tukda
Yield: 4
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 7 பிரட் துண்டுகள்
  • 5 பாதாம்
  • 5 முந்திரி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ
  • 1 கப் சர்க்கரை
  • 1 லிட்டர் பால்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 2 கப் நெய்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்டி வரும் வரை காய்ச்சவும்
  • பிறகு அது துருவிய பாதாம் முந்திரி ஏலக்காய் தூள் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • மீதி இருக்கும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சிறிதளவு சேர்த்து பாகு பதம் வரும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பிரட் துண்டுகளை முக்கோண வடிவில் நறுக்கி நெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • பொரித்த பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊற வைக்கவும்
  • பிறகு பால் முந்திரி கலவையை பிரட் துண்டுகளின் மேல் சேர்த்து அதற்கு மேல் குங்குமப்பூ சேர்த்துபரிமாறினால் சுவையான ஷாகி துக்டா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 64mg | Potassium: 153mg

இதையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!