Home சைவம் மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க...

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் இன்று அனைவருக்கும் பிடித்த மாம்பழ மில்க் ஷேக் செய்து பருகலாம். முக்கனிகளான ஒன்றான மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

-விளம்பரம்-

இதன் பழுத்த கனிகளை அப்படியே உண்ணலாம். ஜூஸாகவும் பருகி வரலாம். மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளன. தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். மேலும் இந்த மாம்பழ மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக மாம்பழத்தை கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
No ratings yet

மாம்பழ மில்க் ஷேக் | Mango Milk shake Recipe In Tamil

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக மாம்பழத்தை கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Mango Milk Shake
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 மாம்பழம்
  • 1/2 லிட்டர் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 கப் மாம்பழ துண்டுகள்
  • ஐஸ் கட்டிகள் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, குளிர்ந்த பால் பாதி அளவு ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் மீதமுள்ள பாலை ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி கொள்ளவும். இப்பொழுது அதன் மேல்  வெட்டியமாம்பழத் துண்டுகளை வைத்து அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து   பரிமாறினால்ஜில்லென்று மாம்பழ மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g | Fat: 7.1g | Sugar: 2g