காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் தோசையானது மிகவும் சத்தானது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு சலிப்பாக இருந்தால், மாற்றாக இந்த தோசையை செய்யலாம். இந்த தோசை நொடிப்பொழுதில் செய்யலாம். இது தவிர ஓட்ஸ் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை | Oats and Peas Dosa Recipe in Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ஓட்ஸ்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 3 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் ஓமம்
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- நெய் தேவையானஅளவு
செய்முறை
- ஓட்ஸை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து வைத்து கொள்ளவும்.
- பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, ஓமம், கொத்தமல்லித்தழை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஓட்ஸை நன்கு கைகளால் மசித்து அரைத்த விழுதுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அதை தோசை கல்லில் தோசை மாதிரி நெய் அல்லது எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும்.
- இது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கு உகந்தது. இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிடும். இதற்கு எல்லா வகையான சட்னியும் நன்றாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!