இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

- Advertisement -

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா பிடிக்காது ஒரு சிலர் மட்டும் தான் இந்த இட்லி உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இட்லி உப்புமா பிடிக்காதவங்க இட்லி மீதமாயிருச்சு நிறைய இட்லி இருக்கு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா கவலை ஏற்பட மாட்டீங்க டக்குனு இந்த மசாலா இட்லிய செஞ்சிருவீங்க.

-விளம்பரம்-

இந்த மசாலா இட்லி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும் ஒரு சில பேருக்கு இரண்டு இட்லிக்கு ஒரு வாளி சாம்பார் ஊத்தி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி இட்லிக்கு நிறைய சாம்பார் சட்னி ஊத்தி சாப்பிடறவங்களுக்கு இந்த மசாலா இட்லி ரொம்ப வெயில் பிடிக்கும் இட்லி கிரேவி மாதிரி இட்லியை பிச்சுப்போட்டு செய்ற இந்த மசாலா இட்லி ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுக்கு எந்த சைட் டிஷ்மே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

- Advertisement -

அதுவே கிரேவி மாதிரி தான் இருக்கும் உங்க பக்கத்து வீட்ல கூட யாராவது இந்த மாதிரி இட்லி மித மாதிரி சின்ன பீல் பண்ணாங்கனா அவங்களுக்கும் கூட நீங்க இந்த ட்ரிக்க சொல்லிக் கொடுக்கலாம் வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ஈஸியா இட்லிய வீணாக்காமல் இந்த சூப்பரான மசாலா இட்லி செஞ்சு சாப்பிடலாம். இட்லியை வேணாம் அப்படின்னு சொல்றவங்க கூட இதை பார்த்த உடனே சட்டுனு காலி பண்ணிடுவாங்க இதை சாப்பாட சாப்பிட பிடிக்கலைன்னா ஈவினிங் ஸ்நாக்ஸா கூட குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க அடம் பிடிக்கவே மாட்டாங்க. இவ வாங்க இந்த சுவையான அட்டகாசமான டேஸ்டான மசாலா இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

மசாலா இட்லி | Masala Idly Recipe In Tamil

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலாஇந்த இட்லி உப்புமா பிடிக்காது ஒரு சிலர் மட்டும் தான் இந்த இட்லி உப்புமாவை ரொம்பவேவிரும்பி சாப்பிடுவாங்க இட்லி உப்புமா பிடிக்காதவங்க இட்லி மீதமாயிருச்சு நிறைய இட்லிஇருக்கு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம்நீங்க இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா கவலை ஏற்பட மாட்டீங்க டக்குனு இந்த மசாலா இட்லியசெஞ்சிருவீங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Masala Idly
Yield: 3
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 7 இட்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 காய்ந்த மிளகாய்

செய்முறை

  • இட்லியை முதலில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்து மிளகாய் வேர்கடலை போட்டுநன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்
  • மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் கரம் மசாலா தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கியதும் சிறிதளவுதண்ணீர் ஊற்றி நன்றாக பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
  • பிறகு அதில் வெட்டி வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி தயார்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Sodium: 121mg | Potassium: 391mg | Calcium: 9mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!