தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை உணவாக சாப்பிடுகின்றனர். இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வார இறுதி நாட்களில் கடைகளில் சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி இருக்கிறோம். கடைகளில் உணவு விரும்பிகளின் விருப்பத்தை புரிந்துகொண்டு, ஒவ்வொரு உணவிலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்து ருசியுடன் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சாலையோர உணவகம் முதல், உணவகம் வரை கிடைக்கும் கொத்து இட்லியை எப்படி வீட்டிலேயே செய்வது என காணலாம். இந்த முட்டை கொத்து இட்லி செய்வது மிகவும் சுலபமாக செய்யலாம். கொத்து புரோட்டாவில் மைதா மாவு இருப்பதால் அது உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது. இதற்கு மாற்றாக நாம் கொத்து இட்லியை சாப்பிடலாம். காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. மீந்த இட்லியை வைத்து மாலையில் முட்டை கொத்து இட்லி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
பொதுவாக வீட்டில் இட்லி மிச்சமாகி விட்டாலே சூர்யவம்சம் தேவயாணி போல உப்புமா செய்வது தான் வழக்கம். ஆனால் இனி கொத்து இட்லி செய்து பாருங்க, புது டிஷ் செய்த அனுபவம் கிடைக்கும். இதனை செய்து தட்டில் வைத்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சத்தம் இல்லாமலும் மிச்சமில்லாமலும் சாப்பிட்டு முடிப்பார்கள். மீண்டும் வேண்டும் என்று மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இட்லி பிடிக்காதவர்கள் கூட இந்த கொத்து இட்லியை செய்தால் அதிகமாக சாப்பிடுவார்கள் அப்படினா பாத்துக்கோங்களேன். எந்த அளவிற்கு இதன் மகிமை இருக்கிறது என்று.
மதுரை கொத்து இட்லி | Madurai Kothu Idly Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 இட்லி
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 முட்டை
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 3 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- மசாலா வாசனை போன பின் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விடவும்.
- அதன்பிறகு இட்லியை இதில் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் வைத்து நன்கு கொத்தி விடவும். எல்லா பக்கத்திலும் நன்கு கொத்தி விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மதுரை ஸ்பெஷல் கொத்து இட்லி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் மட்டன் ஈரல் கிரேவி இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க!