சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

- Advertisement -

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்.  சேமியா நெய் மிளகு சேர்த்து போட்டு பொங்கல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் சேமியா பொங்கல் தயார் செய்திடலாம்.

-விளம்பரம்-

சேமியாவில் செய்யும் உப்புமாவை குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு இந்த சேமியா உப்புமா மீது குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் அதே சேமியாவை இந்த முறையில் அணைத்து பொருட்கள் எல்லாம் சேர்த்து சேமியா பொங்கல் செய்தால்,பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் செய்து கொடுத்து பாருங்கள். இனி எப்போ இருந்த மாதிரி செஞ்சு தருவீங்கன்னு குழந்தைகள் காத்துகிட்டு இருப்பாங்க. இப்ப இந்த சேமியா பொங்கல் ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

- Advertisement -
Print
5 from 1 vote

சேமியா பொங்கல் | Semiya Pongal Recipe In Tamil

சேமியாவில் செய்யும் உப்புமாவை குழந்தைகள்முதற்கொண்டு பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு இந்தசேமியா உப்புமா மீது குழந்தைகளுக்கு ஒரு வெறுப்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் அதேசேமியாவை இந்த முறையில் அணைத்து பொருட்கள் எல்லாம் சேர்த்து சேமியா பொங்கல் செய்தல்பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் செய்தால் கொடுத்து பாருங்கள். இனி எப்போஇருந்த மாதிரி செஞ்சு தருவீங்கன்னு குழந்தைகள் காத்துகிட்டு இருப்பாங்க. இப்ப இந்தசேமியா பொங்கல் ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
 
Prep Time2 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Semiya Pongal
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் சேமியா
  • 1/2 கப் ரவை
  • 1/2 கப் பச்சைப் பருப்பு
  • மஞ்சள் தூள் சிறிது
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 10 முந்திரி
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, வாணலியானது நன்கு சூடானதும், அதில் பாசி பருப்பையும், சேமியாவையும், ரவையும் போட்டு, தனித்தனியாக பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும், பிறகு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் வறுத்த பாசி பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாதவறு நன்கு வேக வைத்து, மீதியுள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
     
  • மேலும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலையை போட்டு நன்கு வேகும் வரை தாளித்து கொள்ளவும்.
  • அடுத்து தாளித்த கலவையில், வறுத்த சேமியாவையும், ரவையையும் போட்டு, இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, நன்கு கொதிக்கும் வரை மூடி வைத்து கொள்ளவும்.
  • பிறகு தண்ணீர் கொதித்து கெட்டியானதும், தேவையான அளவு உப்பு தூவியபின், வேக வைத்த பாசிப் பருப்பை போட்டு சிறிது நேரம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • கடைசியில் மறுபடியும் கொதி வைத்த கலவையானது கெட்டியாகி உதிரிவாக வந்தபின் அடியில் பிடிக்காதவாறு நன்கு.
  • கிளறி விட்டதும்,அடுப்பிலிருந்து இறக்கி, பரிமாறினால் ருசியான சேமியா பொங்கல் சாப்பிட தயார்

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 2g