ஊரை போல உணவிலும் தெய்வீக மனம், சுவையுடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி ஆவி பறக்க இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

காஞ்சிபுரம் என்றால் பட்டு எவ்வளவு நினைவுக்கு வருகிறது அதே அளவுக்கு நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி தான். மிகப்பெரிய பாரம்பரியமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்யும் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

-விளம்பரம்-

இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து இட்லியை வேகவைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரபலமான தென்னிந்திய இட்லியாகும். மிளகு, சீரகம் போன்றவற்றால் தாளிக்கப்பட்ட இட்லி. வழக்கமான இட்லிகளை சாப்பிட்டு சலிப்பாக இருக்கும் போது காஞ்சிபுரம் இட்லியை தயார் செய்து ருசிக்கலாம். மிளகு, ஜீரா, இஞ்சி போன்ற பல பொருட்களுடன் தாளிக்கப்படுவதால்

- Advertisement -

இதன் சுவை வித்தியாசமானது. மந்தாரை இலைகள் இட்லியின் சுவையை கூட்டுகின்றன. இட்லிக்கான மாவு மசாலாப் பொருட்களுடன் கலந்து ஆவியில் வேகவைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் இட்லி. தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி போன்றவையோடு அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4 from 1 vote

காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idly Recipe In Tamil

காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரபலமான தென்னிந்திய இட்லியாகும். மிளகு, சீரகம் போன்றவற்றால் தாளிக்கப்பட்ட இட்லி. வழக்கமான இட்லிகளை சாப்பிட்டு சலிப்பாக இருக்கும் போது காஞ்சிபுரம் இட்லியைதயார் செய்து ருசிக்கலாம். மிளகு, ஜீரா, இஞ்சி போன்ற பல பொருட்களுடன் தாளிக்கப்படுவதால் . இதன் சுவை வித்தியாசமானது. மந்தாரை இலைகள் இட்லியின் சுவையை கூட்டுகின்றன. இட்லிக்கானமாவு மசாலாப் பொருட்களுடன் கலந்து ஆவியில் வேகவைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் இட்லி.தேங்காய் சட்னி,கார சட்னி, புதினா சட்னி போன்றவையோடு அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast
Cuisine: tamilnadu
Keyword: idly
Yield: 4
Calories: 16kcal

Equipment

 • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

 • 1 கப் புழுங்கல் அரிசி
 • 1 கப் பச்சரிசி
 • 1 கப் உளுந்து
 • 1 தேக்கரண்டி சுக்கு பொடி
 • உப்பு

தாளிக்க

 • 2 மேசைக்கரண்டி எண்ணெய் / நெய்
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி உளுந்து
 • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
 • 1 பச்சை மிளகாய்
 • 2 கொத்து கறிவேப்பிலை
 • முந்திரி முந்திரி

செய்முறை

 • அரிசி,உளுந்து அனைத்தையும் கழுவி ஊற வைக்கவும். இவற்றை தனித் தனியாக சற்று கொர கொரப்பாக அரைத்து உப்பு, சுக்கு தூள் கலந்து இரவு முழுவதும் புளிக்க விடவும்.
 • மாவு புளித்ததும் கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, ஒன்று இரண்டாக பொடித்த மிளகு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
 • இதை மாவுடன் நன்றாக கலந்து விடவும். தேவை என்றால் சோடா மாவும் சிறிது கலந்து கொள்ளவும்.
 • முந்திரியைநெய்யில் வறுத்து எடுத்து இட்லி ஊற்ற போகும் தட்டிலோ, கப்பிலோ எண்ணெய் தடவி அதன் நடுவே ஒவ்வொரு முந்திரி வைக்கவும்,இட்லி பாத்திரத்தில் நீரை வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் கப்பில் மாவை நிரப்பி இட்லி பாத்திரத்தில் வைக்கவும்.
 • 10-15 நிமிடம்வேக வைத்து எடுக்கவும். சுவையான மணமான காஞ்சிபுரம் இட்லி தயார்.

செய்முறை குறிப்புகள்

 
விரும்பினால் முதல் நாள் புளிக்கும் முன்பே மாவில் சுக்குடன் சேர்த்து மிளகு. சீரகம் பொடித்து போடலாம். தாளிக்கும் போது கொஞ்சம் பெருங்கா சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கு

Nutrition

Serving: 200g | Calories: 16kcal | Carbohydrates: 89g | Protein: 16g | Fat: 0.2g | Sodium: 538mg | Potassium: 585mg | Fiber: 36g