Home சைவம் ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.

-விளம்பரம்-

குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான்.

குருமா என்றாலே மிளகாய் தூள் மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் சேர்க்கப் போவதில்லை. இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Print
No ratings yet

வெஜிடபிள் ஒயிட் குருமா | Vegetable White Kurma Recipe In Tamil

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Vegetable White Kurma
Yield: 4 People
Calories: 52kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 100 கி கேரட்
  • 100 கி பீன்ஸ்
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1/4 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

அரைக்க :

  • 1/4 கப் தேங்காய்
  • 15 முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா

செய்முறை

  • முதலில் கேரட் மற்றும் பீன்ஸ் இரண்டையும் நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் தயிர் சேர்த்து அதிக நேரம் கொதிக்க விடாமல் நுரைத்து பொங்கி வரும் போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் வெள்ளை குருமா தயார். ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 5.1g | Fat: 4.7g | Saturated Fat: 1.8g | Sodium: 33mg | Potassium: 128mg | Fiber: 5g | Vitamin A: 54IU | Vitamin C: 23mg | Calcium: 22mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி பூரிக்கு ருசியான காய்கறி சாகு குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!