- Advertisement -
சுலபமாக செய்து அசத்தக் கூடிய இந்த காய்கறி சாகு எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். காய்கறி சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பல காய்கறிகள் இதில் சேர்த்து மசாலா கலவையுடன் சமைப்பதால் ருசியும் ஆரோக்கியமும் அதிகமாகும். ரொம்பவே எளிதாக நம்முடைய வீட்டில் காய்கறி சாகு ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
-விளம்பரம்-
காய்கறி சாகு | Mixed Vegetable Sagu Recipe In Tamil
சுலபமாகசெய்து அசத்தக் கூடிய இந்த காய்கறி சாகு எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். காய்கறி சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பல காய்கறிகள் இதில்சேர்த்து மசாலா கலவையுடன் சமைப்பதால் ருசியும் ஆரோக்கியமும் அதிகமாகும். ரொம்பவே எளிதாக நம்முடைய வீட்டில் காய்கறி சாகு ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Yield: 4
Calories: 332kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 வெங்காயம்
- 2 கேரட்
- 100 கிராம் பீன்ஸ்
- 100 கிராம் காலிப்ளவர்
- 2 சௌசௌ
- 2 சீமைக்கத்தரிக்காய்
- 10 பச்சைமிளகாய்
- 1 கொத்தமல்லித் தழை பெரியகட்டு
- 1 அங்குலத்துண்டு இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 2 உருளைக்கிழங்கு
- 100 கிராம் பட்டாணி
- உப்பு ருசிக்கேற்ப
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
அரைத்துக்கொள்ளவும்
- 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது
செய்முறை
- வெங்காயத்தை சிறுதுண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும், எல்லா காய்கறிகளையும் அரிந்து, போதுமான தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம்போட்டு பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
- அரைத்த தேங்காயும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, எல்லா காய்கறிகளையும், கலந்து போதுமான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்க்கவும்.15 நிமிடம் குழம்பு கெட்டியாகும் வரை வேகவைக்கவும். சூடாக, இட்டிலி, அல்லது பூரிக்குத் தெட்டுக் கொள்ளலாம்.
Nutrition
Serving: 100g | Calories: 332kcal | Carbohydrates: 83g | Protein: 7g | Fat: 1g | Sodium: 587mg | Potassium: 421mg | Fiber: 10g | Sugar: 4g | Vitamin A: 4841IU | Calcium: 89mg | Iron: 3mg
- Advertisement -