- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும்.
சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள். மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான். மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். இன்று மென்மையான சர்க்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்ய தோன்றும்!
Ingredients
Method
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து, அதன் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு, வேர்க்கடலை பவுடர், எள்ளு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் கோதுமை மாவை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவில் சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு கலவையை வைத்து மூடி மறுபடியும் தேய்த்து கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சப்பாத்தியை சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சக்கரவள்ளி கிழங்கு சப்பாத்தி தயார். இதனை அப்படியே சாப்பிடலாம்.






