சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள்.
தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சாம்பார் டேஸ்டியாக இல்லாவிட்டால் வீட்டு உணவோ, விருந்து உணவோ ருசிக்காது.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். இந்த சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த தொகுப்பில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் | Sweet Potato Sambar Recipe In Tsmil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் துவரம் பருப்பு
- 1 மேஜை கரண்டி உளுந்து
- 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
- 1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
- 1 மேஜை கரண்டி கரண்டிமிளகு
- 5 வரமிளகாய்
- 1/4 தேங்காய் துண்டுகள்
- 2 அங்குலம் இஞ்சி
- 4 பூண்டு
சாம்பார் செய்ய
- 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்
- 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
- 1 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- 1/2 தேக்கரண்டி பெருங்காயப்பொடி
- கறிவேப்பிலை
- 4 மிளகாய் சின்ன சின்ன தாக நறுக்கியது
- 2 சக்கரை வள்ளி கிழங்கு நறுக்கியது
- 3 தக்காளி துண்டுகள்
- 1 மேஜைகரண்டி சாம்பார் பொடி
- உப்பு தேவையான
- 1/4 கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
செய்முறை
- சக்கரை வள்ளி கிழங்கை முக்கால் வேக்காடு குக்கறில் வேகவைத்து, பின் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
- 3 கப் நீருடன் பருப்பை சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- உளுந்து,கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம்,மிளகு, கச கசா அனைத்தயும்வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். சிறிதுநேரம் கழித்து இதனுடன் தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.
- அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- சிறிது நேரம் கழித்து புளி தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி விடுங்கள். புளி தண்ணீர் கொதித்த பின் சாம்பார் பொடி, வேகவைத்த பருப்பு, சேர்த்து கிளறி விடுங்கள். 5 நிமிடங்கள் கொதித்த பின் சக்கரை வள்ளி கிழங்கை சேர்த்து கிளறி விடுங்கள்.
- 5 நிமிடங்கள் அடுப்பின் மேல் கொதிக்கட்டும். கொதித்த பின் நாம் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- சுவையான,சத்தான, மணமான, கார சாரமான சர்க்கரை வள்ளி கிழங்கு சாம்பார் தயார்.