மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

- Advertisement -

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு வைத்து விடுவோம். இப்படி காலையில் சுட்ட இட்லி மீந்து போனால் மாலை வரை காய்ந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு அதை சாப்பிட முடியாமல் போய்விடும், நமக்கு சாப்பிடவும் பிடிக்காது எனவே இது போல மீந்து போன இட்லிகளை வீணாக்காமல் இட்லி முட்டை உப்புமா செய்யலாம்.

-விளம்பரம்-

இட்லி உப்புமாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு  தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்து போட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி முட்டை சேர்த்து இட்லி முட்டை உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி முட்டை உப்புமா, தனி சுவை இருக்கும். இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை பாடாது . கொஞ்சம் வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த ரெசிபியை நிச்சயம் செய்து பண்ணி பாருங்க.

- Advertisement -
Print
No ratings yet

இட்லி முட்டை உப்புமா | Idly Muttai Uppuma

இட்லி உப்புமாவைதெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு  தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்துபோட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மீதமான இட்லியில் எல்லார்வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி முட்டை சேர்த்து இட்லிமுட்டை உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி முட்டை உப்புமா, தனி சுவை இருக்கும்.இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை பாடாது . கொஞ்சம்வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த ரெசிபியை நிச்சயம் செய்து பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, snacks
Cuisine: tamilnadu
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 இட்லி
  • கடுகு சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு சிறிதளவு
  • 2 முட்டை
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 3 ப.மிளகாய்
  • உப்பு தேவைக்கு
  • எண்ணெய் தேவைக்கு
  • சிறிய துண்டு இஞ்சி

செய்முறை

  • முதலில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
  • பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியைபோட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும். முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும். சுவையான இட்லி முட்டை உப்புமா தயார்

Nutrition

Serving: 200g | Calories: 120kcal | Carbohydrates: 60g | Protein: 13g | Fat: 7.27g | Cholesterol: 2.7mg | Sodium: 67mg | Potassium: 364mg | Fiber: 2.13g | Sugar: 3.56g | Vitamin A: 22IU