Home ஐஸ் சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன் ஐஸ் அப்படின்னு நிறைய வகைகள் இருக்கு. இந்த ஒவ்வொரு வகைகளையும் நிறைய ஃப்ளேவர்ஸ் இருக்கு சாக்லேட் ஸ்ட்ராபெரி பட்டர் ஸ்காட்ச் வெண்ணிலா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொரு ஃப்ளேவரும் ஒவ்வொருத்தருக்கு பேவரட் ஆன ஐஸ்கிரீமா இருக்கும்.

-விளம்பரம்-

ஃபர்ஸ்ட் எல்லாம் நம்ம அதிகமா கடைகள்ல தான் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்ப எல்லாம் வீட்ல இருக்கிறதால நெனச்ச மாதிரியான ஐஸ்கிரீமை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நம்மளை செஞ்சு சாப்பிட்டுக்கலாம் அந்த வகையில இன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச குல்பி ஐஸ் தான் பாக்க போறோம் இந்த குல்பி ஐஸ்லையும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ஃபேவரைட் ஆன சாக்லேட் குல்ஃபி தான் செய்யப் போறோம்.

 இந்த சாக்லேட் குல்ஃபி செய்யறதுக்கு சாக்லேட் தான் முக்கியமான பொருள் மத்த பொருட்கள் எல்லாமே நம்ம வீட்டிலேயே இருக்கும். இந்த குல்ஃபி மட்டும் வீட்ல செஞ்சீங்கன்னா குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சாக்லேட் குல்ஃபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

சாக்லேட் குல்ஃபி | Chocolate Kulfi Recipe In Tamil

ஃபர்ஸ்ட்எல்லாம் நம்ம அதிகமா கடைகள்ல தான் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்ப எல்லாம் வீட்ல இருக்கிறதால நெனச்ச மாதிரியான ஐஸ்கிரீமை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நம்மளை செஞ்சு சாப்பிட்டுக்கலாம் அந்த வகையில இன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச குல்பி ஐஸ் தான் பாக்க போறோம் இந்த குல்பி ஐஸ்லையும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ஃபேவரைட் ஆன சாக்லேட் குல்ஃபிதான் செய்யப் போறோம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: chocolate kulfi
Calories: 146kcal

Equipment

  • 1 குல்பி மோல்டு
  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால் பவுடர்
  • 3/4 கப் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 1/4 கப் பிஸ்தா பருப்பு
  • 1/2 கப் சாக்லேட்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்றாக காய்ந்ததும் பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  • பால் நன்றாக காய்ந்து கெட்டியானதும் அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும் சர்க்கரை கரைந்ததும் அதில் சாக்லேட்டை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
  • அதனை நன்றாக ஆற வைத்து சிறிதளவுபிஸ்தா பருப்பை போட்டு ஒரு காற்று போகாத டப்பாவில் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்
  • பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்து குல்பி மோல்டில் ஊற்றி ஃப்ரீசருக்குள் ஆறு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான சாக்லேட் குல்ஃபி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 146kcal | Carbohydrates: 9g | Protein: 24g | Calcium: 21mg | Iron: 1mg