- Advertisement -
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். வீட்டில் இந்த பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப சுலபமாக நாமே பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவையாக தயாரித்து விடலாம்! அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி தயார் செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள இந்த பதிவில் காணலாம்.
-விளம்பரம்-
பட்டர் ஸ்காட்ச் | Butter Scotch Recipe In Tamil
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
Yield: 4
Calories: 273kcal
Equipment
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் சர்க்கரை
- 2 லிட்டர் பால்
- 3 கப் ஃப்ரெஷ் கிரீம்
- 2 டீஸ்பூன் ஜி.எம்.எஸ்
- 2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
- 1/2 டீஸ்பூன் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர்
செய்முறை
பட்டர் ஸ்காட்ச் செய்ய:
- பொடியாக நறுக்கிய பாதாம் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் முந்திரி – தலா 12 உணவு
செய்முறை : யம்மி பட்டர் ஸ்காட்ச்
- முதலில் பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை 1/2 பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, ஜி.எம்-.-எஸ்-ஸை கலந்து கொள்ளவும்.
- மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற விடவும். 1 டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும்.
- ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் இவற்றைச் சேர்த்து கலக்கவும்.
- அதில் ஃப்ரெஷ் க்ரீம், எசென்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவைகளை சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். இதை சிறிய கப்களில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும்.
- சர்க்கரை மற்றும் பருப்புகளை ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும். பருப்பு வறுபட்டு பொன்னிறமாக மாறும்போது இறக்கி ஆற வைத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இந்தப் பொடியைத் தூவியா பின்பு பரிமாறவும்.
Nutrition
Serving: 200g | Calories: 273kcal | Carbohydrates: 31g | Protein: 4.6g | Fat: 15g | Saturated Fat: 9g | Cholesterol: 5.8mg | Sodium: 106mg | Sugar: 13g | Vitamin C: 0.3mg | Calcium: 169mg | Iron: 0.1mg
- Advertisement -