- Advertisement -
Home ஐஸ் வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான குச்சி ஐஸ் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

- Advertisement -

பெரும்பாலும் நம்ம ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், சாத்துக்குடி, தண்ணீர் பழம் போன்ற பழங்களை தான் விரும்பி சாப்பிடுவோம். இந்த மாதிரி பழங்களை சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி நமக்கு தெரியாத நிறைய பழங்கள் இருக்கு நம்ம சாப்பிட்டே பார்க்காத பழங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடியது. அந்த வகையில லிச்சி பழம் டிராகன் ஃப்ரூட் இது எல்லாமே நிறைய பேரு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த பழங்களில் நிறைய நன்மைகள் இருக்கு.

அதனால இந்த மாதிரி பழங்களும் சில நேரங்களில் வாங்கி சாப்பிட்டு பாருங்க ஆனா இந்த மாதிரி பழங்களை உங்களுக்கு அப்படியே சாப்பிட பிடிக்கல அப்படின்னா அதுல ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம டிராகன் ஃப்ரூட் வச்சு ஒரு சூப்பரான குச்சி ஐஸ் தான் செய்யப் போறோம். இந்த டிராகன் ஃப்ரூட் வச்சு ஜூஸ் மில்க் ஷேக் இது எல்லாமே செஞ்சு சில பேர் குடிச்சிருப்பீங்க ஆனா இது எல்லாத்தையும் மிஞ்சுற சுவையில இந்த குச்சி ஐஸ் உடைய சுவை இருக்கும். இந்த குச்சி ஐஸ் சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

இப்ப குழந்தைகள் லீவு விட்டு வீட்ல இருக்கிற சமயத்துல ஏதாவது அடிக்கடி ரெசிப்பிஸ் செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேட்கிற குழந்தைகளுக்கு கடையில் போய் வாங்கி தராமல் வீட்டிலேயே இந்த மாதிரி சூப்பரான ஐஸ் செஞ்சு கொடுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் சத்தான பழங்களை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அந்த வகையில் டிராகன் ஃப்ரூட் சாப்பிடுவது குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெயில் காலத்துக்கு கண்டிப்பா குழந்தைகள் அடிக்கடி ஐஸ் கேப்பாங்க அந்த மாதிரி கேட்கிற குழந்தைகளுக்காகவே வீட்டில் குச்சி ஐஸ் மோல்டு வாங்கி வச்சுக்கோங்க.

இந்த மோல்டுல நீங்க ஐஸ் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்துட்டீங்கன்னா வேலை முடிஞ்சிடும் உங்கள கடைக்கு போய் ஏதாவது வாங்கி தர சொல்லி குழந்தைகள் தொல்லை பண்ண மாட்டாங்க. வீட்ல இந்த மாதிரி ஏதாவது ஒரு பழங்கள் வச்சு ஐஸ் செஞ்சு வச்சுட்டீங்கன்னா அவங்களே எடுத்து சாப்பிட்டுக்குவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த டிராகன் ஃப்ரூட் குச்சி ஐஸையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான குச்சி ஐஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
1 from 1 vote

குச்சி ஐஸ் | Kuchi Ice Recipe In Tamil

பெரும்பாலும் நம்ம ஆப்பிள் ஆரஞ்சு கொய்யாப்பழம் சாத்துக்குடி தண்ணீர் பழம் போன்ற பழங்களை தான் விரும்பி சாப்பிடுவோம். இந்த மாதிரி பழங்களை சாப்பிடும் போது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி நமக்கு தெரியாத நிறைய பழங்கள் இருக்கு நம்ம சாப்பிட்டே பார்க்காத பழங்கள் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடியது. அந்த வகையில லிச்சி பழம் டிராகன் ஃப்ரூட் இது எல்லாமே நிறைய பேரு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஆனா இந்த பழங்களில் நிறைய நன்மைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பழங்களும் சில நேரங்களில் வாங்கி சாப்பிட்டு பாருங்க ஆனா இந்த மாதிரி பழங்களை உங்களுக்கு அப்படியே சாப்பிட பிடிக்கல அப்படின்னா அதுல ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert
Cuisine: Indian, TAMIL
Keyword: Kuchi Ice
Yield: 4 People
Calories: 102kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 ஐஸ் மோல்டு

தேவையான பொருட்கள்

  • 2 டிராகன் ஃபுரூட்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 கப் தேங்காய் பால்

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய டிராகன் ஃப்ரூட் நாட்டு சர்க்கரை சிட்டிகை உப்பு, தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் பொடியாக நறுக்கிய டிராகன் ஃபுரூட் சேர்த்து குச்சியை மோல்டில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து எடுத்தால் சுவையான டிராகன் ஃப்ரூட் குச்சி ஐஸ் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 102kcal | Carbohydrates: 5g | Protein: 22g | Fat: 2g | Sodium: 134mg | Potassium: 127mg | Vitamin A: 106IU | Vitamin C: 85mg | Calcium: 22mg | Iron: 25mg

இதனையும் படியுங்கள் : ருசியான டிராகன் பன்னீர் லாலிபாப் இது போன்று வீட்டில் செய்து பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!