Home ஐஸ் பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து...

பலாப்பழம் வைத்து குளு குளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது என்பதால் குழந்தைகள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள்.

அவர்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்து கொடுப்பதென்று பார்ப்போம். பொதுவாக பலாப்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க வெப்பமண்டலப் பழமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் பலாப்பழ ஐஸ்கிரீமை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மனம் மட்டுமல்லாமல் உடலும் குளிர்ந்து விடும். கொளுத்தும் இந்த வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் இந்த ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம் தான். இந்த ஐஸ்கிரீமை நாம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் செய்து விடலாம். இந்த ஐஸ்கிரீமை வீட்டில் நீங்கள் செய்து வைத்தால் போதும் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடாதவர்கள். இப்போது சுவையான இந்த பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
No ratings yet

பலாப்பழ ஐஸ்கிரீம் | Jackfruit Icecream Recipe In Tamil

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது என்பதால் குழந்தைகள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். அவர்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்து கொடுப்பதென்று பார்ப்போம். பொதுவாக பலாப்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க வெப்பமண்டலப் பழமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் பலாப்பழ ஐஸ்கிரீமை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மனம் மட்டுமல்லாமல் உடலும் குளிர்ந்து விடும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: deserts
Cuisine: Indian, TAMIL
Keyword: Jackfruit Icecream
Yield: 5 People
Calories: 138kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பலாப்பழம்
  • 2 கப் பிரெஷ் கிரீம்
  • 1/2 கப் கண்டென்ஸ்டு மில்க்
  • 1/4 கப் பலாப்பழ துண்டுகள்
  • நறுக்கிய பாதாம், பிஸ்தா சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பலாப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் இதனை சேர்த்து அதனுடன் பிரெஷ் கிரீம் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு இந்த கலவையை காற்று போகாத டப்பாவில் சேர்த்து அதன்மேல் நறுக்கிய பலாப்பழ துண்டுகள் மற்றும் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து மூடி பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பலாப்பழ ஐஸ்கிரீம் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 138kcal | Carbohydrates: 5.7g | Protein: 28g | Fat: 3.6g | Sodium: 132mg | Potassium: 125mg | Sugar: 32g | Vitamin A: 50IU | Vitamin C: 110mg | Calcium: 38mg | Iron: 31mg

இதனையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!