குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!

- Advertisement -

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் ஐஸ் கிரீம்கள் ஃப்ரோஷன் டெஸட், அதாவது உறைய வைக்கப்பட்ட இனிப்பு மட்டுமே. அதில் பால் அல்லது சத்துமிக்க எந்தவகையான உணவுப் பொருளும் இல்லை. எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.

- Advertisement -

தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம்.

Print
No ratings yet

சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம் | Rec radish icecream recipe in tamil

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: ice cream
Yield: 4 People
Calories: 68kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 சிகப்பு முள்ளங்கி
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/2 கப் ஃப்ரெஷ் கிரீம்
  • 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்

செய்முறை

  • முதலில் முள்ளங்கியை தோல் சீவி, நறுக்கி பின் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த முள்ளங்கி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். முள்ளங்கியின் பச்சை வாசனை போனதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற‌விடவும்.
  • பின்னர் ஒரு பவுளில் ஃப்ரெஷ் கீரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். நல்ல கீரிமீயான பதம் வரும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.
  • பின்னர் அதில் அரைத்த முள்ளங்கியை சேர்த்து மற்றொரு முறை நன்கு பீட் செய்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்துள்ள கீரீமை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஒரு பேப்பரால் மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைத்து விடுங்கள்.
  • பின்னர் அதனை வெளியே எடுத்து பரிமாறவும் போது நறுக்கிய பாதாம், முந்திரி, குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம் தயார்‌.

Nutrition

Serving: 500g | Calories: 68kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.64g | Fat: 0.1g | Sodium: 120mg | Potassium: 350mg | Fiber: 1.9g | Vitamin C: 25mg | Calcium: 30mg