- Advertisement -
Home ஐஸ் அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு குளு குளு வாழைப்பழ ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுங்கள்!!

- Advertisement -

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது என்பதால் குழந்தைகள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள்.

அவர்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான வாழைப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்து கொடுப்பதென்று பார்ப்போம். பொதுவாக வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் வாழைப்பழ ஐஸ்கிரீமை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மனம் மட்டுமல்லாமல் உடலும் குளிர்ந்து விடும்.

- Advertisement -

கொளுத்தும் இந்த வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் இந்த ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம் தான். இந்த ஐஸ்கிரீமை நாம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் செய்து விடலாம். இந்த ஐஸ்கிரீமை வீட்டில் நீங்கள் செய்து வைத்தால் போதும் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான இந்த வாழைப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
No ratings yet

வாழைப்பழ ஐஸ்கிரீம் | Banana Icecream Recipe In Tamil

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதுவும் தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது என்பதால் குழந்தைகள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். அவர்களுக்கு கடைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான வாழைப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்து கொடுப்பதென்று பார்ப்போம். பொதுவாக வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கூலாக்கிவிடும். இவை இரண்டும் ஒன்று சேரக் கிடைக்கும் வாழைப்பழ ஐஸ்கிரீமை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மனம் மட்டுமல்லாமல் உடலும் குளிர்ந்து விடும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: deserts
Cuisine: Indian, TAMIL
Keyword: Banana Icecream
Yield: 5 People
Calories: 101kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 செவ்வாழைப்பழம்
  • 1 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/2 கப் பிரெஷ் கிரீம்
  • 4 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து அதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் ஃப்ரெஷ் கிரீம், வெண்ணிலா எசன்ஸ், கோகோ பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் இந்த ஐஸ்கிரீம் கலவையின் மேல் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் வகைகளை நறுக்கி சேர்த்து பிரிட்ஜில் வைத்து, பின் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ ஐஸ்கிரீம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 101kcal | Carbohydrates: 7.84g | Protein: 23g | Fat: 6.5g | Sodium: 79mg | Potassium: 105mg | Vitamin C: 120mg | Calcium: 25mg | Iron: 28mg

இதனையும் படியுங்கள் : அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு மட்கா குல்பி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!