- Advertisement -
Home ஐஸ் இந்த வெயிலுக்கு குழந்தைகள் குல்பி ஐஸ் கேட்டா வீட்ல இந்த மாதிரி செஞ்சு கொடுங்க!!

இந்த வெயிலுக்கு குழந்தைகள் குல்பி ஐஸ் கேட்டா வீட்ல இந்த மாதிரி செஞ்சு கொடுங்க!!

- Advertisement -

பொதுவா குல்பி ஐஸ் கடையில தான் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்டிலேயே சூப்பரா குல்பி ஐஸ் செய்ய முடியும். அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா ஆமாங்க நிஜமா தான் வீட்டிலேயே ஒரு சூப்பரான குல்பி ஐஸ் அதுவும் ஆரோக்கியமா செய்ய முடியும். இப்ப குழந்தைகளுக்கு லீவு விட்டு இருக்காங்க வெயில் காலம் வேற அதிகமா இருக்கு அதனால கண்டிப்பாக குழந்தைகள் ஏதாவது ஒன்று கேட்டு அடம் பிடித்துக் கொண்டே இருப்பாங்க. அதுலயும் கண்டிப்பா ஜில்லுனு ஏதாவது சாப்பிடணும்னு கேப்பாங்க அந்த மாதிரி கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த டேஸ்டான குல்பி ஐஸ் ரெசிபியை செஞ்சு குடுங்க.

வீட்டிலேயே நிறைய ஐஸ் வகைகள் செய்ய முடியும் அப்படி இருந்தாலும் கூட இந்த குல்பி ஐஸ் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல நம்ம பால் பவுடர் சேர்த்து செய்யப் போறோம். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்ககிட்ட இருந்துச்சுன்னா பாதாம் பவுடர் இல்லன்னா கஸ்டர்ட் பவுடர் சேர்த்து இந்த குல்பி ஐஸ் செய்யலாம். முந்திரி பவுடர் குங்குமப்பூ எல்லாமே சேர்த்து செய்யும் போது சம்ம ரிச்சான டேஸ்ட்ல குல்பி ஐஸ் சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரு தடவை வீட்டில் இந்த ஐஸ் ரெசிபி செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

- Advertisement -

இந்த டேஸ்ட்டான ஐஸ் ரெசிபியை கண்டிப்பாக வீட்ல இருக்குற குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. அவ்ளோ ருசியாக இருக்கக்கூடிய இந்த ஐஸ் ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்லையே செஞ்சு சாப்பிடுங்க கடையில போய் வாங்கினா கூட ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும். ஆனால் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில பசும் பால் கிடைச்சுதுன்னா அதுல செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு இது ஒரு ட்ரீட் அப்படின்னு சொல்லலாம் இப்ப வாங்க இந்த சுவையான குல்பி ஐஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

குல்பி ஐஸ் | Kulfi Ice Recipe In Tamil

பொதுவா குல்பி ஐஸ் கடையில தான் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்டிலேயே சூப்பரா குல்பி ஐஸ் செய்ய முடியும். அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா ஆமாங்க நிஜமா தான் வீட்டிலேயே ஒரு சூப்பரான குல்பி ஐஸ் அதுவும் ஆரோக்கியமா செய்ய முடியும். இப்ப குழந்தைகளுக்கு லீவு விட்டு இருக்காங்க வெயில் காலம் வேற அதிகமா இருக்கு அதனால கண்டிப்பாக குழந்தைகள் ஏதாவது ஒன்று கேட்டு அடம் பிடித்துக் கொண்டே இருப்பாங்க. அதுலயும் கண்டிப்பா ஜில்லுனு ஏதாவது சாப்பிடணும்னு கேப்பாங்க அந்த மாதிரி கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த டேஸ்டான குல்பி ஐஸ் ரெசிபியை செஞ்சு குடுங்க. வீட்டிலேயே நிறைய ஐஸ் வகைகள் செய்ய முடியும் அப்படி இருந்தாலும் கூட இந்த குல்பி ஐஸ் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல நம்ம பால் பவுடர் சேர்த்து செய்யப் போறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert
Cuisine: Indian, TAMIL
Keyword: ABC Vadagam, Kulfi Ice
Yield: 4 People
Calories: 190kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 ஐஸ் மோல்டு

தேவையான பொருட்கள்

  • 1 லி பால்
  • 3 டேபிள் ஸ்பூன் முந்திரி பவுடர்
  • 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை குங்குமப்பூ

செய்முறை

  • பாலை நன்கு சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். அதில் குங்குமப்பூ ஏலக்காய் தூள் முந்திரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பால் பவுடரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதனையும் பாலுடன் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • சர்க்கரை சேர்த்து ஒரு அளவு கெட்டியானதும் ஐஸ் மோல்டில் சேர்த்து எட்டு மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து எடுத்தால் சுவையான குல்பி ஐஸ் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 190kcal | Carbohydrates: 3g | Protein: 12g | Fat: 2.1g | Sodium: 51mg | Potassium: 121mg | Vitamin C: 109mg | Calcium: 30mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : ஐஸ் டீ செய்வது எப்படி