மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான வாழைக்காய் பருப்பு கடையலை செய்து அசத்துங்கள். பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள். இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான்.
நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைக்காய் பருப்பு கடையல் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாழைப்பழங்கள் போன்று வாழைக்காயும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
வாழைக்காயில் பொரியல், அடை, ஜீஸ், சூப், ஊறுகாய், கூட்டு என எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வாழைக்காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இது போல பருப்பு கடையல் செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காரம் குறைவாக இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். எனவே இதை செய்து மகிழுங்கள். இந்த வாழைக்காய் பருப்பு கடையல் சமைப்பது மிகவும் சுலபம்.
வாழைக்காய் பருப்பு கடையல் | Vazhakkai Paruppu Kadayal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 வாழைக்காய்
- 1 கப் துவரம் பருப்பு
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 4 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
- 2 வர மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் தாளிப்பு வடகம்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு
செய்முறை
- முதலில் வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் பருப்பையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடகம் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பின் அதில் வேகவைத்த பருப்பு மற்றும் வாழைக்காயை சேர்த்து 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.
- இது நன்றாக கொதித்தவுடன் ஒரு சட்டிக்கு மாற்றி அதனுடன் புளி கரைசல் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
- பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தாளித்து பருப்பில் கொட்டி கலந்து விடவும்.
- பின் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைக்காய் பருப்பு கடையல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான பசலைக்கீரை கடையல் இப்படி செய்து கொடுங்கள்!