மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமாக செய்வதென்றால் பன்னீர்  பட்டர் மசாலா மற்றும் சிக்கன் என இப்படி வெரைட்டியாக செய்வோம். ஆனால் பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட்டான ஒரு மலாய் கோஃப்தா , சப்பாத்தி சைடிஷ் தான் பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த மலாய் கோஃப்தா  நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான கிரேவி போல இல்லாமல் நல்ல ஒரு கிரிமீ பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். அந்த ரெசிபியை ரொம்ப சுலபமாக வீட்டில் செய்லாம்.

- Advertisement -

பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என்று பல வகையான உணவு வகைகளை சமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பனீர் ,உருளைக்கிழங்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக தனிப்பட்ட சுவைகளில் சமைத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும் மலாய் கோஃப்தா எப்படி செய்வது என்பதனை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள போகின்றோம்.

Print
No ratings yet

மலாய் கோஃப்தா | Malai Kofta Recipe In Tamil

சப்பாத்திரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்தமலாய் கோஃப்தா  நாம் எப்போதும் செய்யும் சாதாரணமானகிரேவி போல இல்லாமல் நல்ல ஒரு கிரிமீ பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும்.அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். அந்த ரெசிபியை ரொம்ப சுலபமாகவீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பனீர் ,உருளைக்கிழங்கு வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என்று பல வகையான உணவு வகைகளைசமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பனீர் ,உருளைக்கிழங்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொருவிதமாக தனிப்பட்ட சுவைகளில் சமைத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு வித்தியாசமானசுவையில் இருக்கும் மலாய் கோஃப்தா எப்படி செய்வது என்பதனை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, Side Dish
Cuisine: Mughal cuisine
Keyword: malai Kofta
Yield: 4
Calories: 0.289kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

கோஃப்தா செய்ய:

  • 100 கிராம் பனீர்
  • 2 உருளைக்கிழங்கு
  • 3 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  • 2 பச்சை மிளகாய்
  • 8 உலர் திராட்சை
  • எண்ணெய் பொரிக்க
  • உப்பு தேவையானஅளவு

க்ரேவி செய்ய:

  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • ஓர் அங்குல துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி தனியா தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 10 முந்திரி
  • 1/2 டம்ளர் கெட்டியான பால்
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 50 கிராம் வெண்ணெய்

செய்முறை

  • உருளைக்கிழங்கை வேக வைத்து. தோல் உரித்து நன்கு மசித்து வைக்கவும். இதனுடன் உதிர்த்த பனீர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மைதா, கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் பிசையவும்.
  • பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டைகளாக நீளவாக்கில் உருட்டி அதனுள் உதிர்த்த பனீர் சிறிதளவு. ஒரு உலர் திராட்சை வைத்து மடித்து மீண்டும். நீளவாக்கில் உருட்டி வைக்கவும். இப்பொழுது கோஃப்தா அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • இப்பொழுது கிரேவி செய்ய வெங்காயத்தை நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து, சூடு தணிந்ததும் அரைக்கவும். தக்காளியை கொதிக்கும் நீரில் ஒரு ஐந்து நிமிடம் போட்டு மூடி வைக்கவும். சூடு ஆறியதும் தோல் உரித்து தக்காளியை அரைத்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து அதனுடன் சீரகம் போட்டு பொரிந்தவுடன் லெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்னர் பூண்டு. இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பொடி வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • முந்திரிமற்றும் கசகசாவை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தவிழுது மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி மூன்று விசில் வரை வைத்து இறக்கவும்.ஸ்ட்ரீம் குறைந்ததும் குக்கரை திறந்து கெட்டியான பாலை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • இப்பொழுது கிரேவி தயார்.

செய்முறை குறிப்புகள்

பரிமாறும் முன் பௌலில் கோஃப்தாவை அடுக்கி அதன்மேல் கிரேவியை ஊற்றி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 0.289kcal | Carbohydrates: 2g | Protein: 26g | Fat: 14g | Saturated Fat: 25g